Home Stories Photos Videos Join
TRENDS
நடிகை கீர்த்தி பாண்டியனின் கிளாமர் ஸ்டில்ஸ்
ஸ்ரீலீலா அசத்தல் கிளிக்ஸ்
ஹைதராபாத் பெண் தொழிலதிபருடைய ரோல்ஸ்-ராய்ஸ் கார்!
வளர்ந்து வரும் கேரளா தொழிலதிபருடைய புது போர்ஷே கார்!
உலகின் பணக்கார பெண் ஃபிரான்ஷுவா பெட்டன் கோர்ட் னுடைய சொத்தின் மதிப்பு !

இளந்தமிழ் மன்றம் 3000 மாணவர்களை ஒருங்கிணைத்து மாபெரும் உலக சாதனை

3000 female students world record : கோவை அவிநாசிலிங்கம் பல்கலைக்கழகம் மற்றும் இளந்தமிழ் மன்றம் ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் ஆகியவை இணைந்து மூன்றாயிரம்…

3000 female students world record : கோவை அவிநாசிலிங்கம் பல்கலைக்கழகம் மற்றும் இளந்தமிழ் மன்றம் ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் ஆகியவை இணைந்து மூன்றாயிரம் மாணவர்களை ஒரே இடத்தில் ஒருங்கிணைத்து தமிழ்நாடு 2024 மற்றும் நோ ப்ளாஸ்டிக் என்கின்ற வாசகங்களில் இரண்டரை மணி நேரம் நின்று 2000 மரக்கன்றுகளையும் மூன்றாயிரம் மஞ்சப்பைகளை கையில் ஏந்தியும் ஒரே நிமிடத்தில் 3,000 மாணவிகள் மூன்றாயிரம் திருக்குறள்களை எழுதியும் மாபெரும் உலக சாதனை நிகழ்த்தினர்..

3000 female students world record
3000 female students world record

நிகழ்விற்கு வருகை தந்த அனைவரையும் பல்கலைக்கழகத்தின் என் எஸ் எஸ் பிரிவு திட்ட அலுவலர் திருமதி ராதா அவர்கள் வரவேற்றார்.. நிகழ்விற்கு கோவை மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் பொறியாளர்கள் திருமிகு.நளினி மற்றும் திருமிகு கே. ரவிச்சந்திரன் அவர்களும் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் திருமிகு.பாரதி ஹரிசங்கர் அவர்களும் பதிவாளர் கே .கௌசல்யா அவர்களும் சிறப்பு விருந்தினராக சிறப்புரையாற்றினார்கள்….

மேலும் நிகழ்வில் இளந்தமிழ் மன்றத்தின் நிறுவனர் திருமிகு.இளந்தமிழன் க.அபினேஷ் அவர்களும் ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தின் செ.வெங்கடேசன் அவர்களும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நோக்க உரையாற்றி சிறப்பித்தார்கள்… இந்த மாபெரும் உலக சாதனைகளை சிறப்பான முறையில் ஒருங்கிணைத்த இளந்தமிழ் மன்றத்தின் தலைவர் இரா.மகாகிருஷ்ணன் மற்றும் பல்கலைக்கழக என் எஸ் எஸ் மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது…

Read Also : பள்ளி மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கிய எம்எல்ஏ

மேலும் உலக சாதனை நிகழ்த்தியதற்காக அவிநாசிலிங்கம் பல்கலைக்கழகத்திற்கும் இளந்தமிழ் மன்றத்திற்கும் ஸ்டார் ஐகான் 2024 விருது ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் வழங்கி சிறப்பிக்கப்பட்டது… இறுதியாக நிகழ்விற்கு வருகை புரிந்த அனைவருக்கும் பல்கலைக்கழகத்தின் என் எஸ் எஸ் திட்ட அலுவலர் வேல்விழி நன்றியுரையாற்றி சிறப்பித்தார்கள்….

புதியது

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி போன்ற பல கட்டுரைகளை படிக்க vtamiltv.com வில் பாருங்கள்.

இப்போதே படிக்க