Home Stories Photos Videos Join
TRENDS
நடிகை கீர்த்தி பாண்டியனின் கிளாமர் ஸ்டில்ஸ்
ஸ்ரீலீலா அசத்தல் கிளிக்ஸ்
ஹைதராபாத் பெண் தொழிலதிபருடைய ரோல்ஸ்-ராய்ஸ் கார்!
வளர்ந்து வரும் கேரளா தொழிலதிபருடைய புது போர்ஷே கார்!
உலகின் பணக்கார பெண் ஃபிரான்ஷுவா பெட்டன் கோர்ட் னுடைய சொத்தின் மதிப்பு !

கம்ப்யூட்டர் உதவியோடு கார் ஓட்டுவது போன்ற பாவனையாக்கி எந்திரம், துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர்

A computer-aided driving simulator : கம்ப்யூட்டர் உதவியோடு கார் ஓட்டுவது போன்ற பாவனையாக்கி எந்திரம், துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர் இயந்திரத்தில் கார் ஓட்ட முயலும்…

A computer-aided driving simulator : கம்ப்யூட்டர் உதவியோடு கார் ஓட்டுவது போன்ற பாவனையாக்கி எந்திரம், துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர் இயந்திரத்தில் கார் ஓட்ட முயலும் போது சீட்டு பெல்ட் அணியாததால் இயந்திரம் ஸ்டார்ட் ஆக மறுத்து ஒலி எழுப்பியது, அதை தொடர்ந்து சீட் பெல்ட் அணிந்து கொண்டு இயந்திரத்தில் கார் ஓட்டிய மாவட்ட ஆட்சியர் சுவாரசியம்:-

மயிலாடுதுறையில் தனியார் டிரைவிங் ஸ்கூல் ஒன்றில் கார் ஓட்ட கம்ப்யூட்டர் உதவியுடன் கற்றுக் கொடுக்கும் பாவனையாக்கி இயந்திரம் 6/1/2024 லில் நிறுவப்பட்டது. முன்பபகுதியில் மூன்று கணினிகள் வடிவமைக்கப்பட்டு உண்மையான காரில் உள்ளது போல் உட்புறம் ஸ்டியரிங், கியர் உள்ளிட்ட இயந்திரங்களை கொண்டு வடிவமைக்கப்பட்ட கார் நிறுவப்பட்டுள்ளது.

A computer-aided driving simulator
A computer-aided driving simulator

இந்த காரை சாவி போட்டு வழக்கமான கார் ஓட்டுவது போல ஸ்டார்ட் செய்ததும் கணின உதவியுடன் முன்பக்க திரையில் சாலைகள் பக்கவாட்டு கண்ணாடிகள் ஆகியவற்றின் மூலம் காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது.

இதன் மூலம் சாலையில் காரை ஓட்டிச் செல்லும் உணர்வு ஏற்படும் மாசு கட்டுப்பாடு மற்றும் முதலில் கற்றுக் கொள்ளக்கூடியவர்கள் விபத்துக்கள் இல்லாமல் இயக்கி பழக முடியும். இந்த காரை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி 6/1/2024லில் துவக்கி வைத்தார் துவக்க நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் காரை ஓட்டுவதற்கு அதன் இருக்கையில் உட்கார்ந்து சாவி போட்டவுடன் பீப் ஒலி எழுந்த வண்ணம் இருந்தது.

அதனைப் பார்த்த பயிற்சியாளர்கள் சீட் பெல்ட் அணியாவிட்டால் கார் ஸ்டார்ட் ஆகாது என தெரிவித்தார், அதை தொடர்ந்து சீட் பெல்ட் அணிந்தவாறு மாவட்ட ஆட்சியர் பாவனை இயந்திரத்தில் ஆர்வத்துடன் காரை ஓட்டினார். இந்த சம்பவம் அந்த பகுதியில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியது

Read Also : 2023 January Month Whatsapp Status in Tamil

புதியது

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி போன்ற பல கட்டுரைகளை படிக்க vtamiltv.com வில் பாருங்கள்.

இப்போதே படிக்க