HOME

STORIES

google-news

FOLLOW

JOIN

FOLLOW

பொழுதுபோக்கு

பிக் பாஸால என் லைஃபே போச்சு-மனவேதனையில் டைரக்டர் வாசுவின் மகன் சக்தி சொன்னது

actor sakthi talk about bigboss show

பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி பி.வாசு மகன் சக்தி கொடுத்திருக்கும் பேட்டி தான் தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிகச் சிறந்த டைரக்டர்களில் ஒருவர் பி.வாசு. இவர் திரைப்பட டைரக்டர் மட்டுமின்றி நடிகர், திரைப்பட தயாரிப்பாளர், திரைப்பட கதாசிரியர் என பன்முகங்களை உடையவர். இவருடைய திரைப்படங்கள் அனைத்துமே வியாபார ரீதியாக வெற்றி பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் தமிழில் ஒரு வெற்றிகரமான இயக்குனராக விளங்கிய போதிலும் இவரது மகன் சக்தியால் தமிழ் சினிமாவில் ஒரு வெற்றி பெற்ற நடிகராக வலம் வர முடியவில்லை. ஷக்தி நடிகராக தொட்டால் பூ மலரும் என்ற படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். இதன் பிறகு பல திரைப்படங்கள் நடித்து இருக்கிறார். ஆனால், சக்திக்கு அழகு மற்றும் திறமையும் இருந்தும் சினிமாவில் பட வாய்ப்புகள் சொல்லும் அளவிற்கு இடம்பெறவில்லை.

actor sakthi talk about bigboss show
actor sakthi talk about bigboss show

பிக் பாஸ் நிகழ்ச்சியில் சக்தி:

அதன் பின் சக்தி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றாலே திரைப்பட வாய்ப்புகள் நிறைய வரும் என்று தான் எதிர்பார்ப்பார்கள். ஆனால், பலருக்கும் அவ்வாறு நடந்துவிடுவது இல்லை. அதேபோல் இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு மக்கள் மத்தியில் அதிக எதிர்மறை விமர்சனங்கள் தான் வந்தது.

இதையும் படிங்க : தக் லைஃப் படத்தை பார்த்த பின்பு மணிரத்னத்திற்கு கமல் போட்ட கண்டிஷன்! அது என்ன தெரியுமா?

actor sakthi talk about bigboss show
actor sakthi talk about bigboss show

நிகழ்ச்சிக்கு பின்:

சொல்லப்போனால் இவர் ஒரு பெரிய வில்லனாகவே மக்கள் மத்தியில் தோன்றினார். அதன் பிறகு இவர் சில திரைப்படங்களில் நடித்தார். இருந்தாலும், அது பெரிதாக வரவேற்கப்படவில்லை. அதற்குப்பின் இவருக்கு பெரிதாக பட வாய்ப்புகளும் அமையவில்லை. இந்த நிலையில் அண்மையில் அளித்த பேட்டியில் நடிகர் சக்தி, நான் சிறு வயதிலிருந்தே தோல்வியை சந்தித்தது இல்லை.

actor sakthi talk about bigboss show
actor sakthi talk about bigboss show

சக்தி பேட்டி:

எதிலும் தோற்று போனதும் கிடையாது. நன்றாகத்தான் நான் படித்தேன். நான் MBA வரை படித்திருக்கிறேன். ஆனால், இந்த சினிமாத்துறைக்கு வந்த பிறகு தான் நான் அதிக தோல்விகளை சந்தித்து இருக்கிறேன். குறிப்பாக, பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போனது தான் என்னுடைய லைஃப்லேயே நான் செய்த பெரிய தவறு. என்னுடைய அப்பா இந்த நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டாம் என்று கூறினார். ஆனால், நான் அதை கேட்காமல் பிடிவாதமாக சென்றேன்.

பிக் பாஸ் குறித்து சொன்னது:

நான் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பின்பு நிறைய பிரச்சனைகள் வந்தது. அதனால் நான் வீட்டிலேயே இருந்துவிட்டேன் அப்போது நடிகர் ரஜினி சார் தான் என்னுடைய அப்பாவிற்கு ஃபோன் பண்ணி என்னை பற்றி விசாரித்தார். என்னிடம் மீண்டும் சினிமாவிற்கு வரும்படி கூறினார் என்று சொல்லியிருந்தார்.

இதையும் படிங்க : ஒரு கப் கோதுமை மாவு இருந்தா.. ஈவ்னிங் நேரம் இப்படி செய்யுங்க.. குழந்தைங்க அசையா சாப்பிடுவாங்க..

மேலும் சுவாரஸ்யமான செய்திகளுக்கு வி தமிழ் நியூஸ் வாட்ஸ்அப் whatsapp சேனலை கிளிக் செய்து பின்தொடரவும்