HOME

STORIES

google-news

FOLLOW

JOIN

FOLLOW

தமிழ்நாடு

இந்த வயசுலயும் பாட்டி செஞ்சிட்டு இருக்கிற வேலையை பாருங்க!!! எல்லோரையும் ஆச்சரியப்படுத்தும் அளவிற்கு தொடரும் பாட்டியின் செயல்!!!

Amazing hardworker grandmother

இன்றைய உலகத்தில் விலைவாசிகள் அனைத்துமே மடமடவென்று எகிறி கொண்டே போகிறது. அத்தியாவசிய பொருளான பாலிற்கு கூட நிலையான விலை என்பது இல்லை என்ற அளவிற்கு தற்போதைய சமுதாயம் உருவாகி வருகிறது. மேலும் பல உணவுப் பொருட்களில் புதுப்புது வகைகள் உருவாக்கி அவற்றிற்கு நிறைய விலைகளும் வைத்து விற்கின்றனர்.

Amazing hardworker grandmother
Amazing hardworker grandmother

கண்ணை கவரும் வகையில் பல உணவுப் பொருட்களை அலங்கரித்து பார்த்த உடனே வாங்கி சாப்பிட வேண்டும் என்று நினைக்க தோன்றும் அளவிற்கு இன்று நிலைமை மாறிவிட்டது.சமீபத்தில் கூட தோசையில் கூட சீஸ் தோசை, பல வகையான காய்கறிகள் மற்றும் வெங்காயம் போன்றவற்றை உபயோகித்து செய்யும் கலர்ஃபுல்லான தோசை என தோசையிலேயே பல வகைகளை நம்மால் காண முடிகிறது. அதனைத் தொடர்ந்து இட்லியும் தற்போது புதுப்புது வகைகளில் ஒரு ஒரு சுவையில் உருவாக்கப்பட்டு சமைத்து விற்கப்படுகிறது.

அவற்றிற்கும் ஒவ்வொரு விதமான இட்லியிலும் ஒவ்வொரு வித விலைகள் நிர்ணயிக்கப்பட்டு வியாபாரம் செய்யப்படுகிறது. முதலில் பசிக்கு சாப்பிடுவது தற்போது சுவைக்கு சாப்பிடுவது என மாறிவிட்டது. உணவகங்களும் இன்று முழுமையான வியாபார நோக்கத்துடன் செயல்பட தொடங்கி விட்டது.

Amazing hardworker grandmother
Amazing hardworker grandmother

சமூகத்தில் பணத்தின் தேவை அதிகமாக உள்ளதால் எல்லோருமே பணத்தை தேடி இது போன்று விலைவாசிகளை ஏற்றி உணவுப் பொருள்களை விற்பனை செய்து வருகின்றனர். எவ்வளவு வருமானம் வந்தாலும் கூட போதவில்லை அவற்றை மென்மேலும் அதிகரிப்பதற்காக பல யுக்திகளை கையாண்டு வியாபார நோக்குடன் கூடுதலான விலைகளில் பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.

ஆனால் தற்போது ஒரு வயதான பாட்டி ஒருவர் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் தள்ளாடும் வயதிலும் அசத்தலான ஒரு செயலை செய்து வருகிறார்!!! தற்போது அவர் செய்யும் சூப்பரான செயலானது வீடியோவாக இணையத்தில் வைரல் ஆகி வருகிறது!! அவர் அந்த வீடியோவில் தெரிவித்திருப்பது என்னவென்றால்..

Amazing hardworker grandmother

தன்னுடைய பெயர் கமலாதா என்றும், வடிவேலம்பாளையம் என்னும் கிராமத்தில் வசித்து வருவதாகவும் கூறியுள்ளார். கடந்த 50 ஆண்டுகளாக இட்லி செய்து வியாபாரம் செய்து வருவதாக கூறியுள்ளார்.

Amazing hardworker grandmother
Amazing hardworker grandmother

முதலில் 50 பைசாவிற்கு இட்லி விற்பனை செய்து வந்ததாகவும் தற்போது 1 ரூபாய்க்கு இட்லி விற்பனை செய்து வருகிறார். ஆனா எப்படி விற்பனை ஆகிறது இந்த விலையில் விற்பனை செய்தால் என்று எல்லோரும் கேட்பீர்கள்!!! வருபவர்கள் எல்லோரும் அவர்களால் முடிந்த அரிசி உளுந்து ஆகியவற்றை கொடுக்கிறார்கள் என்றும் கூறியுள்ளார். மேலும் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இந்த விஷயத்தை செய்யவில்லை என்றும் பசியில் வரும் ஏழைகளுக்கு சாப்பாடு கொடுக்கும் எண்ணத்துடன் தான் இதை செய்து வருவதாகவும் தெரிவித்திருக்கிறார் !!!

இவ்வாறு இவ்வளவு வயதாகியும் கூட தள்ளாத நிலைமையிலும் கூட மன தைரியத்துடன் இதுபோன்று மிகக் குறைவான விலையில் இட்லி செய்து விற்பனை செய்து கொண்டிருக்கும் பாட்டியை பார்க்கும் பொழுது மிகவும் வியப்பாக இருக்கிறது. அதுவும் இன்றைய உலகத்தில் பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்று ஓடிக்கொண்டு இருக்கும் பலரை நம்மால் காண முடியும் ஆனால் இந்தப் பாட்டியோ ஏழைகளுக்கு உணவு தர வேண்டும் என்ற நோக்குடன் செயல்பட்டு வருவது தற்போது எல்லோரது வரவேற்பையும் பாராட்டுதலையும் பெற்று வருகிறது.

Amazing hardworker grandmother
Amazing hardworker grandmother

தற்போது இந்த பாட்டி பேசியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி எல்லோரது கவனத்தை பெற்று வருவதோடு பலருக்கும் முன் உதாரணமாக இவர் இருக்கிறார். தற்பொழுது இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது!!!

இதையும் படிங்க : காமெடி கிங்க் கவுண்டமணி குறித்து பலருக்கு தெரியாத பத்து பொக்கிஷ செய்திகள்!

மேலும் சுவாரஸ்யமான செய்திகளுக்கு வி தமிழ் நியூஸ் வாட்ஸ்அப் whatsapp சேனலை கிளிக் செய்து பின்தொடரவும்