HOME

STORIES

google-news

FOLLOW

JOIN

FOLLOW

பொழுதுபோக்கு

Bigg Boss Kamal : பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கமல்ஹாசன் அதிரடி விலகல்…. ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சி…!

vtamilnews kamal

Bigg Boss Kamal : விஜய் டி வியில் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 2017 வருடம் முதல் ஒளிபரப்பாகி வருகிறது. 6 சீசன்கள் இதுவரை முடிந்துள்ளன. இந்த பிக்பாஸ் தொடர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியை முன்னணி நடிகரான கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். தமிழ் மட்டுமல்லாமல், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என பிராந்திய மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

Bigg Boss Kamal
Bigg Boss Kamal

இதில் கலந்து கொண்ட பிரபலங்களுக்கு பிரபலத்தோடு சினிமாவில் நடிக்கக்கூடிய வாய்ப்பும் கிடைப்பதால், சினிமாவில் நடிக்க விரும்பும் நடிகர்களின் பார்வை முழுவதும் போட்டியாளர்களின் தேர்வு பட்டியலின் பக்கமாக சென்றது. இந்த நிலையில் 7 வது பிக்பாஸ் சீசன் கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி ஆரம்பித்தது. இந்த சீசனில் பிக்பாஸ் வீட்டில் இரண்டு வீடுகள் உருவாக்கப்பட்டுள்ளது.

Watch Video : மேளதாள முழங்க சீர்வரிசை எடுத்து வந்து நன்றி தெரிவித்த விவசாயிகள்

இந்த சீசனையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இதற்கு முந்தைய சீசன்களை போலில்லாமல் இந்த சீசனில் ஒரு தொகுப்பாளராக கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறார். பிரதீப்பிற்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றியது கடந்த வாரம் நிவிஷா – நிக்சன் விவகாரத்தை கண்டுகொள்ளாமல் கடந்து சென்றது வரை நடிகர் கால்ஹாசன் சந்தித்த சர்ச்சைகள் ஏராளம் உள்ளன.

Bigg Boss Kamal : பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கமல்ஹாசன் அதிரடி விலகல்

இதனால் கமல்ஹாசன் பெயர் கெட்டு வருகிறது. குறிப்பாக சமூக வலைதளங்களில் கமல்ஹாசனை ஏராளமானோர் வறுத்தெடுத்து வருகிறார்கள். இந்த ஷோவில் தப்பை தட்டி கேட்காத நீங்கள் அரசியலுக்கு வந்தால் என்ன என்று பலவிதமான கேள்விகளை எழுப்பி வருகின்றனர். ஆகவே இந்த நிகழ்ச்சியால் கமலின் அரசியல் வாழ்க்கையும் பாதிக்கப்படும் சூழ்நிலையும் உருவாகி வருகிறது. இதனை கருத்தில் கொண்டு அதிரடியான முடிவை கமல்ஹாசன் எடுத்துள்ளாராம்.

அதன்படி இந்த சீசனுடன் கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகி அரசியலில் தன்னுடைய கவனம் முழுவதும் செலுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அநேகமாக கமல்ஹாசனின் கடைசி சீசனாக இதுவாகத்தான் இருக்கும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒரு வேளை கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகினால் அவருக்கு பதிலாக நடிகர் சிம்புவை களமிறக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுத்து வருகிறது.

Read Also : தலையில் உள்ள பொடுகை போக்குவதற்கு இந்த ஹேர் பேக் கை பயன்படுத்துங்க …!

மேலும் சுவாரஸ்யமான செய்திகளுக்கு வி தமிழ் நியூஸ் வாட்ஸ்அப் whatsapp சேனலை கிளிக் செய்து பின்தொடரவும்