HOME

STORIES

google-news

FOLLOW

JOIN

FOLLOW

சோளம் ஆரோக்கியமான உணவு தான். ஆனா அதுல இருந்து தயாரிக்கப்படுற பாப்கார்னும் ஆரோக்கியம் தானேன்னு ஒரு கேள்வி வருது. ஆனா, குழந்தைங்களுக்கு பாப் கார்ன் நிறைய கொடுக்காதீங்க என்பதே உணவியல் நிபுணர்களின் பரவலான அறிவுரையா இருக்கு. பாப் கார்ன் நிஜமாலுமே ஆரோக்கியமானதா? குழந்தைகளுக்கு பாப் கார்ன் கொடுக்குறது சரியா?

Do your kids eat popcorn

உண்மையிலேயே பாப்கார்ன் ஆரோக்கியமான snacks தான். இது மட்டும் இல்லாம பாப்கார்ன்ல VitaminB, மக்னீசியம், துத்தநாகம் போன்ற அத்தியாவசிய சத்துக்களும் பாப்கார்ன்ல இருக்கு. பாப் கார்ன் ஆரோக்கியமா இருக்குறதும் ஆரோக்கியத்துக்கு கெடுதலா இருக்கிறதும் அது தயாரிக்கப்படும் முறையில தான் தீர்மானம் ஆகுது.

வெண்ணெய், எண்ணெய், உப்பு மற்றும் கூடுதலான sesaonings கலக்காத வரைக்கும் பாப்கார்னால எந்த பாதிப்பும் கிடையாது. ஆனா, சாதாரணமா theatreல படம் பாக்க போறவங்கள காட்டிலும் பாப்கார்ன் சாப்பிட போறவங்க தான் அதிகம்னு கூறலாம். Theatreல படங்களுக்கு intermission விடும்போது, அதாவது 80% மக்கள் வாங்கிட்டு வர்ற snacks எதுன்னா அது பாப்கார்னாகத்தான் இருக்கும். அதுலயும் குழந்தைகளை பற்றி சொல்லவே வேணாம்.

இதுபோன்ற பாப்கார்னை தான் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க. இப்படி theatreல விற்கக்கூடிய பாப்கார்ன்ல அதிகப்படியான எண்ணெய், வெண்ணெய் மற்றும் வசீகரிக்கும் வாசனையுள்ள sesaonings சேக்கப்பட்டு இருக்கும். இப்படிப்பட்ட சில seasoningsல செயற்கை நிறமிகளும் கலந்து சேர்க்கப்பட்டு இருக்கலாம்.

இப்படி ஏகப்பட்ட கலோரிகளை ஒரே நேரத்துல உண்ணும் போது உடல்ல சக்கரை மற்றும் கொழுப்பு அளவுகள் வெகுவாக உயரலாம். குழந்தைகளுக்கு சின்ன வயசுல புடிச்சு போற ருசிக்கு பிற்காலத்துல அவங்க அந்த வகை உணவுகளையே மீண்டும் மீண்டும் சாப்பிடத் தூண்டும். இதன் விளைவாக உடல் பருமன் மற்றும் பல இணை நோய்களை உண்டாக கூடும். இதனால குழந்தைகளுக்கு தரக்கூடிய உணவு விஷயத்துல பெற்றோர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது முக்கியம்.

Do your kids eat popcorn
Do your kids eat popcorn

குழந்தைகளை பொறுத்த மட்டில் கொழுப்பு சேக்கபடாத பாப்கார்ன்களை சாப்பிடலாம். அது மட்டுமில்லாம சுகாதாரமான கடைகள்ல வாங்குறது மிகவும் முக்கியம். அதுலயும் எந்த வயசுக் பிள்ளைகளுக்கு பாப்கார்னை கொடுக்குறாங்க அப்படின்றதையும் கவனத்துல வச்சுக்கணும்.

காரணம், ரொம்ப சின்ன குழந்தைகளுக்கு பாப்கார்ன் தொண்டையிலயே மாட்டிக்கொள்ளும் அபாயமும் இருக்கு அதனால மென்னு விழுங்க தெரிஞ்ச குழந்தைகளுக்கு மட்டும் செயற்கை சுவையூட்டிகள் நிறைய இல்லாத பாப்கார்ன் மட்டுமே தரலாம். எதையுமே அளவுக்கு மீறி சாப்பிடாம மிதமான அளவுல சாப்பிடறதோட, சரிவிகித உணவுல காய்கறிகள் மற்றும் பழங்களையும் சேத்துக்குறது மிகவும் அவசியம் என்பதே உணவியல் நிபுணர்களின் கருத்தாக இருக்கு.

மேலும் சுவாரஸ்யமான செய்திகளுக்கு வி தமிழ் நியூஸ் வாட்ஸ்அப் whatsapp சேனலை கிளிக் செய்து பின்தொடரவும்