HOME

STORIES

google-news

FOLLOW

JOIN

FOLLOW

Elkai race near Tharangambadi : தரங்கம்பாடி அருகே திருக்கடையூரில் மாடு குதிரை வண்டிகளுக்கான எல்கை பந்தயம் பல்லாயிரம் ரசிகர்கள் கண்டு மகிழ்ந்தனர்.இந்த பந்தயத்தில் வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கு பரிசுகளையும் ரொக்க பணத்தையும் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் வழங்கினார்:-

Elkai race near Tharangambadi
Elkai race near Tharangambadi

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் புகழ்பெற்ற மாடு மற்றும் குதிரை வண்டிகளுக்கான எல்கை பந்தயம் காணும் பொங்கலை முன்னிட்டு நடைபெற்றது சிறியமாடு, நடுமாடு, பெரிய மாடு வண்டிகளுக்கான பந்தயமும் அதே போன்று குதிரைகளுக்கான போட்டியில் புதுக் குதிரை, கரிச்சான்குதிரை, நடுகுதிரை, பெரிய குதிரைகளுக்கான பந்தயங்களும் நடைபெற்றது.

Read Also : தனியார் பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி

இந்த போட்டிகளில் காளைகளும், குதிரைகளும் சீறிப்பாய்ந்தன. சீறிப்பாய்ந்த குதிரை வண்டி பந்தயத்தை பல்லாயிரம் ரசிக பெரு கள் ஆர்வமுடன் கண்டு மகிழ்ந்தனர். இந்நிகழ்ச்சியின் நிறைவாக எல்கை பந்தயத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு கேடயங்களும் ரொக்க பரிசுகளும் வழங்கப்பட்டன. இந்த பரிசுகளை பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் வழங்கினார்.

மேலும் சுவாரஸ்யமான செய்திகளுக்கு வி தமிழ் நியூஸ் வாட்ஸ்அப் whatsapp சேனலை கிளிக் செய்து பின்தொடரவும்