HOME

STORIES

google-news

FOLLOW

JOIN

FOLLOW

இந்தியா

கல்யாணம் செய்ய மணமகளை தேடி தாருங்கள்.. மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்த இளைஞர்..!

Find a groom to marry

Karnataka: கர்நாடகா மாநிலம் கொப்பல் மாவட்டத்தில் இருக்கும் ஜனஸ்பந்தனா என்ற பகுதியில் குறைதீர்க்கும் முகாம் மாவட்ட ஆட்சியர் நளினி அதுல் தலைமையில் நடைபெற்றது. சங்கப்பா என்ற விவசாயி மாவட்ட ஆட்சியர் நளினி அதுலிடம் சென்று தனது மனப்பூர்வமான வேண்டுகோளுடன், கடந்த 10வருடங்களாக தான் மணமகளை தேடி வருவதாகவும், தன்னை கல்யாணம் செய்து கொள்ள யாரும் சம்மதிக்கவில்லை என்றும் குறிப்பிட்டு மனு ஒன்றை கொடுத்தார்.

Petition to the district collector to find a groom for marriage

Find a groom to marry
Find a groom to marry

கர்நாடகா மாநிலத்தில் உள்ளூர் விவசாயி சங்கப்பா என்பவர் தனது வேண்டுகோள் உடன் மனு ஒன்றை மாவட்ட ஆட்சியர் நளினி அதுலை அணுகினார், அதில் அவர் கடந்த 10 வருடங்களாக மணப்பெண்ணைத் தேடி கொண்டுள்ளதாகவும், அவரை திருமணம் செய்ய யாரும் சம்மதிக்கவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். குறை தீர்ப்பு நிகழ்ச்சியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இது மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

கர்நாடகாவின் கொப்பல் மாவட்டத்தில் இருக்கும் ஜனஸ்பந்தனா பொதுக் குறை தீர்க்கும் முகாமில், உள்ளூர் விவசாயி ஒருவர் மணமகளை கண்டுபிடிக்க உதவுமாறு வழக்கத்திற்கு மாறான மனு கொடுத்துள்ளார் சங்கப்பா என்ற விவசாயி இந்த மனுவை கொடுத்துள்ளார்.

கர்நாடகா மாநிலம் கொப்பல் மாவட்டத்தில் இருக்கும் ஜனஸ்பந்தனா என்ற பகுதியில் மாவட்ட ஆட்சியர் நளினி அதுல் தலைமையின் கீழ் குறைத்தீர்ப்பு முகாம் நடைபெற்றது. அப்பகுதி மக்கள் பலரும் தங்கள் பகுதிகளில் உள்ள குறையை சரி செய்யவேண்டி மனு அளித்தனர். அப்போது யாரும் எதிர்ப்பார்க்காத படி ஒருவர் வித்தியாசமான மனு ஒன்றை கொடுத்தார்.

சங்கப்பா என்ற விவசாயி மாவட்ட ஆட்சியர் நளினி அதுலிடம் சென்று தனது மனப்பூர்வமான வேண்டுகோளுடன், கடந்த 10 வருடங்களாக தான் மணப்பெண்ணை தேடி கொண்டுள்ளதாகவும், தன்னை திருமணம் செய்து கொள்ள யாரும் விருப்பம் தெரிவிக்கவில்லை என்றும் குறிப்பிட்டு மனு ஒன்றை வழங்கினார்.

அந்த விவசாயி அளித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், சங்கப்பா மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்ததும், அந்த மனுவை மாவட்ட ஆட்சியர் படித்ததும் இடம்பெற்றுள்ளது. அத்துடன் சங்கப்பா ஒலிபெருக்கியில் மனுவில் உள்ள விவரங்களை குறிப்பிட்டு உதவி கோரியுள்ளார், வித்தியாசமான மனுவை பெற்ற மாவட்ட ஆட்சியர் இதனை கேட்டதும் சிரித்தவாறு பதிலளித்தார்.

இந்த வீடியோவானது தற்போது பலரால் இணையதளத்தில் பகிரப்பட்டி வருகிறது. திருமணத்திற்கான மணப்பெண்களின் எதிர்ப்பார்ப்பு அதிகமாக உள்ள நிலையில், இன்றைய இளைஞர்களுக்கு பெண் பார்ப்பது பெரும் சவாலாக இருப்பதாக கருத்துக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் பல இளைஞர்களுக்கு குறிப்பிட்ட வயது கடந்தும் கல்யாணம் ஆகாமல் இருப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் சுவாரஸ்யமான செய்திகளுக்கு வி தமிழ் நியூஸ் வாட்ஸ்அப் whatsapp சேனலை கிளிக் செய்து பின்தொடரவும்