காங்கிரஸ் கமிட்டியின் செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் பம்மல் வடக்கு பகுதி சார்பில் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு அனகாபுத்தூர் பேருந்து நிலையம் அருகில் முன்னாள் பாரதப் பிரதமர் ஜவஹர்லால் நேரு சிலை புதுப்பொலிவுடன் திறக்கப்பட்டது.
Labor Day celebration Pammal
பின்பு நூலகம் அருகில் பாஜக அரசின் நிர்வாக சீர் கேட்டை கண்டித்து பிரச்சார தெருமுனை கூட்டம் பொம்பள வடக்கு பகுதி காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஏ. எஸ்.அப்துல் காதர் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பாழிப்பாளராக செங்கல்பட்டு வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஆர்.எஸ் செந்தில்குமார் அவர்கள் மற்றும் எம் . தீனதயாளன், ஜே.பி.விஜய் ஆனந்த் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி பொதுமக்களுக்கு தாகம் தீர்க்கும் வகையில் நீர்மோர் மற்றும் பழ வகைகள் வழங்கினார். மேலும் இதில் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பொறுப்பாளர் இலா.பாஸ்கர் , பேச்சாளர் குமரி மகாதேவன் ஆகியோரும் சிறப்புரையாற்றினர்.

இதில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மாநில பொதுக்குழு உறுப்பினர் எஸ்.டேனியல், மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் டி.ஆர். பாண்டியன், டி ரமேஷ், ஏ.எம் மோகன், கே.கல்யாணசுந்தரம், ராமமூர்த்தி, விஜய் வேலன் ,ஏ.ஜெகதீஸ் டி.பாஸ்கர்,மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் இறுதியாக பம்மல் வடக்கு பகுதி 3வது வட்ட துணைத் தலைவர் எம்.ஸ்ரீதர் நன்றி உரையாற்றினார்.