HOME

STORIES

google-news

FOLLOW

JOIN

FOLLOW

செய்தி

Mayiladuthurai : 15 அடி ஆழ பள்ளத்தில் விழுந்து பெண் படுகாயம்; சம்பவ இடத்தை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு!

mayil

Mayiladuthurai : மயிலாடுதுறை ரயில் நிலைய விரிவாக்க பணியில் 15 அடி ஆழத்தில் தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து பெண் படுகாயம், சம்பவ இடத்தை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் 24 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன இதற்காக ரயில்வே நிலையம் முகப்பு மற்றும் நடைமேடை பகுதிகளில் 15 அடி ஆழத்திற்கு பள்ளங்கள் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

Mayiladuthurai
15 அடி ஆழ பள்ளத்தில் விழுந்து பெண் படுகாயம்; சம்பவ இடத்தை Mayiladuthurai மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு!

கடந்த சில தினங்களுக்கு முன்பு முதலாம் நடைமேடையில் ரயிலில் இருந்து இறங்கி வந்த தஞ்சை மாவட்டம் முள்ளுக்குடியைச் சேர்ந்த சந்தியா தேவி என்ற 38 வயது பெண்மணி ஒருவர் 15 அடி பள்ளத்தில் தவறி விழுந்து படுகாயம் அடைந்தார் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Watch Video : சீரியல் நடிகையை மணம்முடித்த ரெடின் கிங்ஸ்லி

சம்பவ இடத்தை Mayiladuthurai மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு!

பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல் பணிகள் நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த சம்பவம் குறித்து பத்திரிகைகளில் வெளியான செய்தியை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இன்று விரிவாக்க பணிகள் நடைபெறும் இடத்தை நேரில் ஆய்வு செய்தார்.

அவருக்கு ரயில்வே நிலைய அதிகாரிகள் மற்றும் ஒப்பந்தக்காரர்கள் நடைபெறும் பணி விவரத்தை விளக்கி கூறினர். பொதுமக்கள் பாதிக்காத வகையிலும் முறையான தடுப்புகள் அறிவிப்பு பலகைகள் வைத்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அப்போது வலியுறுத்தினார்.

Read Also : குழந்தை விஷயத்தில் எடுத்த முடிவு? ஆச்சர்யத்தில் சமந்தா ரசிகர்கள்

மேலும் சுவாரஸ்யமான செய்திகளுக்கு வி தமிழ் நியூஸ் வாட்ஸ்அப் whatsapp சேனலை கிளிக் செய்து பின்தொடரவும்

Related Latest News