HOME

STORIES

google-news

FOLLOW

JOIN

FOLLOW

செய்தி

Mayiladuthurai Breaking : சமூக சேவகரிடம் கஞ்சா போதையில் பணம் கேட்டு ரவுடிகள் கொலை வெறி தாக்குதல்

Mayiladuthurai : தெருவில் சுற்றி திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை சீர்திருத்தி குடும்பத்திடம் ஒப்படைத்து வரும் சமூக சேவகர் மீது மாமூல் கேட்டு கஞ்சா போதையில் ரவுடிகள் கொலைவெறி தாக்குதல் காவல் துறையில் வழக்கு பதிவு ஒருவர் மருத்துவமனையில் அனுமதி

Mayiladuthurai Breaking : சமூக சேவகரிடம் கஞ்சா போதையில் பணம் கேட்டு ரவுடிகள்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பெரம்பூர் கிராமத்தைச் சேர்ந்த பாரதிமோகன் மற்றும் அவரது சகோதரர் தனுஷ்கோடி ஆகியோர் பாரதி மோகன் அறக்கட்டளை என்ற பெயரில் சமூக சேவைகளை செய்து வருகின்றனர். குறிப்பாக மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களில் சாலைகளில் சுற்றித் திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து குளிப்பாட்டி, சவரம் செய்து புது உடைகள் அணிவித்து சமூக வலைதளங்கள் மூலம் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கும் பணியை பல ஆண்டுகளாக செய்து வருகின்றனர்.

Mayiladuthurai Breaking : சமூக சேவகரிடம் கஞ்சா போதையில் பணம் கேட்டு ரவுடிகள் கொலை வெறி தாக்குதல்
Mayiladuthurai Breaking : சமூக சேவகரிடம் கஞ்சா போதையில் பணம் கேட்டு ரவுடிகள் கொலை வெறி தாக்குதல்

நூற்றுக்கணக்கான மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் இவர்கள் அந்தந்த காவல் நிலையத்தில் மூலம் குடும்பத்துடன் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த ரவுடிகள் இவர்களிடம் மாமுல் கேட்டு மிரட்டல் விடுத்திருந்த நிலையில் நேற்று மங்கநல்லூர் அருகே கிளியனூர் என்ற இடத்தில் காரில் சென்ற போது வழிமறித்த ரவுடி கும்பல் கஞ்சா போதையில் கட்டைகள் உள்ளிட்ட ஆயுதங்களைக் கொண்டு கொலை வெறி தாக்குதல் நடத்தி இருக்கின்றனர்.

Most Read : குரோம்பேட்டையில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள சிக்னலை அகற்றக்கோரி சிபிஎம் கோரிக்கை

இதில் காரின் கண்ணாடி மற்றும் காரில் இருந்த தனுஷ்கோடி கடுமையாக தாக்கப்பட்டார் அவர் பலத்த காயங்களுடன் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் இச்சம்பவம் குறித்து பெரம்பூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர் மாமுல் கேட்டு கஞ்சா போதையில் சமூக சேவகரை ரவுடிகள் தாக்கிய சம்பவம் மயிலாடுதுறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Watch Video : புதன் கிழமை செய்ய வேண்டிய சிறப்பு வழிபாடு

மேலும் சுவாரஸ்யமான செய்திகளுக்கு வி தமிழ் நியூஸ் வாட்ஸ்அப் whatsapp சேனலை கிளிக் செய்து பின்தொடரவும்