HOME

STORIES

google-news

FOLLOW

JOIN

FOLLOW

செய்தி

21 கிலோமீட்டர் தூரம் வரை பேருந்து ஓட்டுநராக மாறிய மயிலாடுதுறை எம் எல் ஏ..

Mayiladuthurai MLA Drive Bus 21KM

Mayiladuthurai MLA Drive Bus 21KM : மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் வரை புதிய பேருந்தை புதிய வழித்தடத்தில் இயக்கம். அரசு பேருந்தை 21 கிலோமீட்டர் தூரம் வரை செல்லும் வழிகளில் பேருந்தில் பயணிகளை ஏற்றி இறக்கி ஓட்டுனராக மாறிய எம் எல்ஏ :-

Mayiladuthurai MLA Drive Bus 21KM

மயிலாடுதுறை அருகே மணல்மேட்டில் இருந்து திருவாரூர் மாவட்டத்திற்கு புதிய பேருந்து சேவை புதிய வழித்தடத்தில் தொடக்கம்; மயிலாடுதுறை எம்எல்ஏ ராஜகுமார் புதிய பேருந்தை சுமார் 21 கிலோமீட்டர் தூரம் வரை இயக்கினார். பொதுமக்கள் வழித்தடங்களில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்:-

Mayiladuthurai MLA Drive Bus 21KM

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு பேருந்து நிலையத்திலிருந்து பட்டவர்த்தி மற்றும் மயிலாடுதுறை வழியாக திருவாரூர் மாவட்டத்திற்கு புதிய வழித்தடத்தில் புதிய அரசு பேருந்து சேவை 8/02/2024 லில் துவக்கப்பட்டது. மணல்மேடு மற்றும் பட்டவர்த்தி வழியாக மயிலாடுதுறைக்கு வரும் பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் என அனைவரும் உரிய நேரத்தில் செல்வதற்கு பேருந்துகள் கிடைக்காமல் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். மேலும், பேருந்துகளின் படிக்கட்டுகளில் தொங்கியவாறு ஆபத்தான நிலையில் பயணம் செய்தும் பணிக்கு செல்கின்றனர்.

இந்நிலையில் பொதுமக்கள் என பலரும் இப்பகுதிக்கு புதிய பேருந்து வசதி வேண்டுமென்று பல நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். அந்த கோரிக்கையை ஏற்று மயிலாடுதுறை எம்எல்ஏ ராஜகுமார் 8/02/2024 லில் மணல்மேட்டில் இருந்து பட்டவர்த்தி வழியாக திருவாரூர் மாவட்டத்திற்கு புதிய பேருந்து சேவை துவங்கி வைத்தார். மணல்மேடு பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்த துவக்க விழாவில் புதிய பேருந்தை மயிலாடுதுறை எம்எல்ஏ எஸ்.ராஜகுமார் கொடியசைத்து துவக்கி வைத்ததுடன் தானே பேருந்தை ஓட்டிச் சென்றார்.

மணல்மேடு, திருவாளபுத்தூர், பட்டவர்த்தி, மல்லிகை கொல்லை, வில்லியநல்லூர், நீடூர் வழியாக மயிலாடுதுறை பேருந்து நிலையம் வரை வந்த புதிய பேருந்தை வழிநெடிகளும் பொது மக்களுக்கு கிராம மக்கள் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் உற்சாகமாக கொண்டாடி வரவேற்றனர்.

அனைத்து பேருந்து நிறுத்தங்களிலும் பயணிகளை ஏற்றியும், இறக்கியும் விட்ட சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் சுமார் 21 கிலோமீட்டர் தூரம் வரை புதிய பேருந்தை இயக்கிச்சென்றார். வழக்கமாக புதிய பேருந்து சேவைகளை துவங்கி வைக்கும் மக்கள் பிரதிநிதிகள் அவர்களுக்கு பேருந்தை ஓட்டத்தெரியும் பட்சத்தில் சில அடி தூரம் வரை பேருந்தை இயக்குவது வழக்கம்.

அதேபோலத்தான் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் பேருந்தை இயக்கத்துவங்கியதும் பலரும் இவர் சில அடிகள் வரை ஓட்டி செல்வார் என்று எதிர்பார்த்த நிலையில் ஆனால் அவர் சற்றும் யாரும் எதிர்பாராத விதமாக, பேருந்தை 21 கிலோ மீட்டர் தூரம் வரை பேருந்து ஓட்டுநராக மாறி பேருந்து அனைத்து நிறுத்தங்களிலும் பேருந்தை நிறுத்தி பொதுமக்களை பேருந்தில் ஏற்றி இறக்கிய நிகழ்வு பொதுமக்களிடையே பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. மணல்மேடு முதல் மயிலாடுதுறை புதிய பேருந்து நிலையம் வரை ஓட்டி சென்ற சட்டமன்ற உறுப்பினருக்கு பலரிடமிருந்து பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.

இப்பேருந்தானது திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செல்பவர்களுக்காகவும், மாணவர்கள் பள்ளி கல்லூரிக்கு செல்வதற்காகவும், புதிய வழித்தடத்தில் புதிய பேருந்து இயக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவாரஸ்யமான செய்திகளுக்கு வி தமிழ் நியூஸ் வாட்ஸ்அப் whatsapp சேனலை கிளிக் செய்து பின்தொடரவும்

Related Latest News