Mayiladuthurai Temple Seal : மயிலாடுதுறையில் அறநிலையத்துறை அதிகாரிகள் திரௌபதி அம்மனுக்கு சொந்தமான இடங்களுக்கு வாடகை செலுத்தாத நபரின் கடைகளுக்கு பூட்டி சீல் வைக்க வந்தவர்களை தடுத்து நிறுத்திய குத்தகை விவசாய பாதுகாப்பு சங்கத்தினர் மற்றும் தமிழ்நாடு அடிமனை பயனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை நகரில் காந்திஜி சாலை அருகில் இந்து அறநிலைய துறைக்கு உட்பட்ட அருள்மிகு திரௌபதி அம்மன் திருத்தலம் இருக்கிறது. இந்த ஆலயத்திற்கு சொந்தமான இடத்தில் 50 வீடு மற்றும் கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இதில் 17 கடைகளில், ரூ 3 கோடி வாடகை பாக்கி செலுத்தப்படாமல் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் 704 சதுர அடி பரப்பிலுள்ள இடத்தில் மூர்த்தி என்பவர் மூன்று கடைகளாக்கி உள் வாடகைக்கு விட்டு வருவாய் பெற்று வந்துள்ளார்.இவர் நீண்ட காலங்களாக வாடகை செலுத்தவில்லை. அந்த தொகையானது நிலுவையில் உள்ளது. அவர் செலுத்த வேண்டிய வாடகை பாக்கி ரூ 7 லட்சத்து 19 ஆயிரத்து 296 னை செலுத்ததால், மயிலாடுதுறை இந்து சமய அறநிலைய துறை இணை ஆணையர் நீதிமன்றத்தில் இந்து சமய அறநிலைய துறை சட்ட பிரிவு 78 ன் கீழ் வழக்கு பதிவு செய்தார்கள்.
Watch Video : விஜயராஜ் விஜயகாந்த் ஆக மாறியது ..

Mayiladuthurai Temple Seal | தடுத்து நிறுத்திய சங்கத்தினர்
அந்த விசாரணையின் முடிவில் தீர்ப்பானது மூர்த்தியின் கடையில் உள்ள பொருட்களை அப்புறப்படுத்தி பூட்டி சீல் வைக்க இணை ஆணையர் மோகனசுந்தரம் உத்தரவிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர், அடிமனை பயனாளிகள்மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் மற்றும் அறநிலைய துறை அதிகாரிகள் வருவதற்கு முன்னதாகவே கடையின் முன்பு அமர்ந்து அவர்களுடைய எதிர்ப்பினை வெளிப்படுத்தினார்கள்.
திரௌபதி அம்மன் கோயில் தனியார் கோயில் என்று நீதி மன்றத்தால் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த திரௌபதி அம்மன் கோயில் நிர்வாகத்தில் அறநிலைய துறை நிர்வாகிகள் அத்துமீறி நுழைந்து கடைகளை பூட்டி, சீல் வைக்க வந்த அறநிலையத்துறையின் உதவி ஆணையர் முத்துராமன்,மற்றும் ஆலய நிலங்கள் தனி தாசில்தார் கோமதி தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வந்த அதிகாரிகளை தடுத்து நிறுத்தி மாவட்ட தலைவர் ராயர் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
Also Read
- கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா விவாகரத்து அறிவிப்பு.. இணைந்து அறிவித்த நட்சத்திர தம்பதி!
- கணவனின் 3 வது திருமணத்திற்கு ஏற்பாடு செய்த மனைவிகள்.. ஆந்திராவில் விநோத கல்யாணம்!
- தயாரிப்பு முறையில் பல்வேறு குளறுபடிகள் பக்கவிளைவுகளை உண்டாகும் உணவாக மாறுகிறதா பானிபூரி..?
- T20 World Cup: எங்களால் எந்த டீமையும் வீழ்த்த முடியும் – ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷீத் கான்
- வங்கிக் கணக்கு இருந்தால் மட்டும் தான் மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் ? பள்ளி கல்வித்துறை அதிரடி நடவடிக்கை
மயிலாதுறை டிஎஸ்பி சஞ்சீவ் குமார் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டும், மயிலாடுதுறை அறநிலைய துறை அதிகாரிகள் மற்றும் மயிலாடுதுறை தாசில்தார் சபிதா தேவி போராட்டத்தினார்களோடு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read Also : 2024ல் பெற்றோர்கள் கடைபிடிக்க வேண்டிய தீர்மானங்கள்