HOME

STORIES

google-news

FOLLOW

JOIN

FOLLOW

செய்தி

மகளிர் திட்டம் சார்பில் மதிசுடர் ஆயத்த ஆடை உற்பத்திஅலகு மையத்தை திறந்து வைத்த மாவட்ட ஆட்சியர்

Nagai Madisudar Readymade Garment

Nagai Madisudar Readymade Garment : கீழ்வேளுரில் மகளிர் திட்டம் சார்பில் மதிசுடர் ஆயத்த ஆடை உற்பத்தி அலகு மையத்தை ஆட்சியர் திறந்து வைத்து: கொள்முதல் செய்து ஊக்கம் ஏற்படுத்திய மாவட்ட ஆட்சியர்:

Nagai Madisudar Readymade Garment
Nagai Madisudar Readymade Garment

Nagai Madisudar Readymade Garment

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் குருக்கத்தியில் அமைத்துள்ள வட்டார வணிக வளாக மையத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மகளிர் திட்டம் சார்பாக குருக்கத்தி, 119 அனக்குடி, அகரக்கடம்னூர் போன்ற ஊராட்சிகளில் தையல் சிறு தொழில் தொகுப்பு மகளிர் தொழில் முனைவோர்களை கொண்டு மதி சுடர் ஆயத்த ஆடை உற்பத்தி அலகு நிலையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : வேளாங்கண்ணியில் விலையில்லா தலைக்கவசம் வழங்கி விழிப்புணர்வு

இத்தொழில் தொகுப்பிற்கு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் வாயிலாக தலா ரூ.250000 வீதம் வழங்கப்பட்டுள்ளது. இத்தொகுப்பிலிருந்து முதற்கட்டமாக 10 தொழில் முனைவோர்களை தேர்ந்தெடுத்து மதி சுடர் ஆயத்த ஆடை உற்பத்தி அலகு மையத்தினை மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் திறந்து வைத்தார். அதனை தொடந்து மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு தலா ரூ.50,000 வீதம் 20 மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு ரூ.10 இலட்சம் தொழில் கடனாக வழங்கினார்.

இதையும் படிங்க : மொபைல் ஜார்ஜரில் இருக்கிற இந்த குறியீடுகள் எதற்காக தெரியுமா?

முன்னதாக மாவட்ட ஆட்சியர் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் தயாரிக்கப்பட்ட கைவினைப் பொருட்கள் கண்காட்சியினை பார்வையிட்டு கொள்முதல் செய்து ஊக்கப்படுத்தினர். இந்நிகழ்சியில் திட்ட இயக்குநர்(மகளிர் திட்டம்) முருகேசன், உதவி திட்ட அலுவலர்கள் சந்திரசேகர், காமராஜ் வட்டாட்சியர் ரமேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரேவதி கீழ்வேளூர் பேரூராட்சி மன்ற செயல் அலுவலர் குகன் மாவட்ட வலப் பயிற்றுநர் சுகந்தி வட்டார இயக்க மேலாளர் ராஜகோபால் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் தங்கமணி சித்ரா மகேஸ்வரி ரவிச்சந்திரன் கிருபா தேவி வைகை சமுதாய வள பயிற்றுனர்கள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் பங்கேற்று கொண்டனர்.

இதையும் படிங்க : அசைவத்தை மிஞ்சிடும் ருசியில் சைவ கீமா கிரேவி செய்வது எப்படி?

மேலும் சுவாரஸ்யமான செய்திகளுக்கு வி தமிழ் நியூஸ் வாட்ஸ்அப் whatsapp சேனலை கிளிக் செய்து பின்தொடரவும்

Related Latest News