HOME

STORIES

google-news

FOLLOW

JOIN

FOLLOW

செய்தி

வீட்டு வேலைக்கு சென்ற பெண்ணுக்கு ஏற்பட்ட சோகம் – கண்டன குரல் எழுப்பிய பா.ரஞ்சித்

P Ranjith raised his voice of condemnation

Pa. Ranjith raised his voice of condemnation : திமுக சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகன் வீட்டில் வேலைசெய்த இளம்பெண்ணை அவரது மகன் மருமகள் உள்ளிட்ட குடும்பத்தினர் பெரும் சித்திரவதை செய்துள்ளனர்.அந்த தகவல் பெரும் அதிர்ச்சி அளிப்பதாக திரைப்பட இயக்குநர் பா ரஞ்சித் தெரிவித்திருக்கிறார்.

பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகன் வீட்டில் வேலை செய்த இளம்பெண்ணை அவரது குடும்பத்தினர் கொத்தடிமை போன்று கொடும் சித்திரவதை செய்துள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.

Pa. Ranjith raised his voice of condemnation

Pa. Ranjith raised his voice of condemnation
Pa. Ranjith raised his voice of condemnation

தனக்கு நேர்ந்த சித்திரவதைகளைக் கண்ணீரோடு கூறும் அந்த இளம் பெண்ணின் காணொளியைப் பார்க்கிற போது நெஞ்சம் பதைபதைக்கிறது. அப்பெண்ணுக்கு நடந்தேறியது சொல்ல முடியாத மனிதவதை யாராலும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.

ஏழை,எளிய குடும்பப் பின்னணியில் பிறந்ததால், வறுமையையும், ஏழ்மையையும் போக்க வீட்டு வேலைக்குச் சென்ற அந்த பெண்ணுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை . இரவு பகல் என்றும் பாராது ஓய்வில்லாத வகையில் கடுமையான வேலைகளைக் கொடுத்து உழைப்பைச் சுரண்டியதோடு மட்டுமல்லாமல், நினைத்துப் பார்க்கவே முடியாத அளவுக்குக் கொடூரமாகத் தாக்கப்பட்டிருக்கிறார்.

Read Also : திருமண உதவித்தொகை பெறுவது எப்படி..!

அந்த இளம் பெண்ணை தினமும் துன்புறுத்தி வந்த அந்த குடும்பத்தினரின் செயல் கடும் கண்டனத்திற்குரியது. எளிய மனிதர்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் இந்த கோரத்தாக்குதல்களும், வன்முறை வெறியாட்டங்களும் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டிய கொடுங்குற்றமாகும் என பலரும் ஆவேசமாக கருத்து கூறி வருகிறார்கள்.

இந்நிலையில் தமிழ் திரைபட இயக்குனர் பா.ரஞ்சித்தும் அந்த பெண்ணுக்கு நடந்த கொடுமை பற்றி கண்டன குரல் எழுப்பி இருக்கிறார். இது பற்றி பா.ரஞ்சித் அவர்கள் வெளியிட்டிருக்கும் செய்தியில் கூறிருப்பதாவது :

பல்லாவரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகன் வீட்டில் வேலை செய்த இளம் பெண்ணை அவரது மகன் மருமகள் உள்ளிட்ட குடும்பத்தினர் கொடும் சித்திரவதைக்கு உள்ளாகிய செய்தி பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.

இக்கொடூர செயலை புரிந்தவர்கள் மீது எந்த வித பாரபட்சம் இன்றி தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதியும் நிவாரணமும் தாமதம்
இன்றி கிடைத்திட துணை நிற்போம் என்று பா.ரஞ்சித் தெரிவித்திருக்கிறார்.

மேலும் சுவாரஸ்யமான செய்திகளுக்கு வி தமிழ் நியூஸ் வாட்ஸ்அப் whatsapp சேனலை கிளிக் செய்து பின்தொடரவும்