HOME

STORIES

google-news

FOLLOW

JOIN

FOLLOW

முன்னாள் தமிழக அமைச்சர் கோ.சி.மணியின் நினைவு நாளையொட்டி அமைதி பேரணியும் அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து,மாவட்ட தி.மு.க சார்பில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலத்தில், முன்னாள் தமிழக அமைச்சர், சோழ மண்டல தளபதி என்கிற கோ. சி.மணி அவர்களின் எட்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, மயிலாடுதுறை மாவட்ட தி.மு.க. சார்பாக நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது.

Peace rally on the occasion of Ko.Si. Mani memorial day
Peace rally on the occasion of Ko.Si. Mani memorial day

அதையொட்டி குத்தாலத்தில் திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் குத்தாலம் கல்யாணம் முன்னிலையில், திமுக மாவட்ட கழக செயலாளர் நிவேதா எம் முருகன் தலைமையில்,மாவட்ட அளவில் உள்ள நகர, ஒன்றிய செயலாளர்கள், நகர மன்ற தலைவர்கள், பேரூராட்சி தலைவர்கள் மற்றும் கழகத்தினர், குத்தாலம் பேரூராட்சி அலுவலகத்தில்லிருந்து அமைதி பேரணி புறப்பட்டு, கோ.சி.மணி சதுக்கத்தில் அமைந்துள்ள அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினார்.

பின்னர் அவரின் சொந்த கிராமமான மேக்கிரிமங்களத்தில் உள்ள அவரது உருவசிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர். இதில் ஏராளமான தி.மு.க பொருப்பாளர்களும், கட்சியினரும் கலந்து கொண்டு முன்னாள் அமைச்சர் கோ.சி.மணியின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மேலும் சுவாரஸ்யமான செய்திகளுக்கு வி தமிழ் நியூஸ் வாட்ஸ்அப் whatsapp சேனலை கிளிக் செய்து பின்தொடரவும்

Related Latest News