HOME

STORIES

google-news

FOLLOW

JOIN

FOLLOW

ஆன்மீகம்

எப்போது ராகு – கேது பெயர்ச்சி? – இந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்!

rahu ketu peyarchi 2025: ஜோதிடத்தை பொறுத்தவரை இந்த உலகமும், இந்த உலகத்தில் வாழும் மக்களும் இயங்க 9 கிரகங்களின் செயல்பாடுகள் தான் மிக முக்கியம் என கூறப்பட்டு உள்ளது. இந்த கிரகங்கள் 12 ராசிகளிலும் குறிப்பிடத்தகுந்த மாற்றங்களை ஏற்படுத்துகிறது. அது ஏற்றமாகவும் அல்லது இறக்கமாகவும் இருக்கலாம். இப்படி உள்ள நிலையில் இந்த கிரகங்களில் சில கிரகங்களின் தாக்கம் மிகப்பெரிய அளவு உள்ளதாக இருக்கும். அந்த வகையில் சனி மற்றும் செவ்வாய் இந்த இரண்டு கிரகங்களை காட்டிலும் ஆபத்தான கிரகமாக ராகு பார்க்கப்படுகிறது.

rahu ketu peyarchi 2025

2025 ஆம் வருடம் மே 18 ஆம் தேதி ராகு – கேது பெயர்ச்சி வருகிறது. அப்போது மீன ராசியில் குடியிருந்த ராகு பகவான் அந்த ராசியிலிருந்து இடம் பெயர்ந்து கும்ப ராசிக்கு பிரவேசிக்க போகிறார்.

ஜோதிடத்தின் படி, ராகு பகவான் ஒரு நிழல் கிரகமாகும். அவர் கும்ப ராசியில் அதிக பலமுள்ளவராக திகழ்வார். எனவே 2025 ஆம் ஆண்டு சில ராசிக்காரர்கள் ராகு பகவானிடம் நீங்கள் எவ்வளவு கவனமாக இருக்கின்றார்களோ, அந்தளவு நல்லது எனவும் கூறப்படுகிறது. இந்த ராகு கேது பெயர்ச்சியின் காரணமாக கடகம், சிம்மம், துலாம், விருச்சிகம், மகரம் மற்றும் மீனம் கொண்ட ராசிக்காரர்கள் சந்திக்கும் எதிர்மறை நிகழ்வுகள் மற்றும் என்னென்ன பரிகாரங்களைப் பின்பற்ற வேண்டும் எனகூறப்பட்டுள்ளது. அதனைப் பற்றி பார்க்கலாம்.

rahu ketu peyarchi 2025
rahu ketu peyarchi 2025

கடகம்: இந்த ராசியின் 8 வது வீடான கும்பம் வீட்டில் ராகு நுழைவதால், இவர்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தில் பாதி விரையமாகிவிடும் சூழல் அமையும். நீங்கள் நம்ப கூடிய நபர்களால் அதிகம் ஏமாற்றம் அடைவதற்கான வாய்ப்பு உள்ளது. உறவினர்களால் நிதி இழப்புகள் உண்டாக வாய்ப்புள்ளது, மேலும் உங்கள் சகோதரர்கள் சொத்துக்களுக்காக உங்களை ஏமாற்றக்கூடும். உயர் அதிகாரிகளால் வேலையில் பிரச்சினைகள் உண்டாகலாம். புதிய வேலை மற்றும் திருமணம் முயற்சிகளில் தடைகள் உண்டாகும்.

சிம்மம்: இந்த ராசியின் 7வது வீட்டில் ராகு நுழைய உள்ளதால், வாழ்க்கைத் துணைக்கு அடிக்கடி நோய்கள் வருவதற்கு வாய்ப்புள்ளது. போதை பழக்கங்களில் ஈடுபட வாய்ப்பு உண்டாகலாம். இந்த ராசிக்காரர்களுக்கு தேவையற்ற தொடர்புகள் ஏற்படவும் உண்டு பண்ணும். உங்கள் அதிகாரிகள் எப்போதும் உங்கள் பணி சுமையை அதிகரிக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். வெளிநாட்டில் பணிபுரிபவர்கள் சில சிரமங்களை சந்திக்க நேரிடும். திருமண சம்பந்தமான முயற்சிகளில் சிக்கல் ஏற்படலாம். குடும்ப வாழ்க்கையில் தீர்க்கமுடியாத பிரச்சினைகள் உண்டாகலாம். கண்மூடித்தனமாக யாரையும் நம்ப வேண்டாம்.

துலாம்: இந்த ராசிக்கு 5ஆம் வீட்டில் ராகு நுழைவதால், சமூகத்தில் அவப்பெயர் உண்டாக வாய்ப்பு உண்டு. உங்கள் வேலையின் மேல் அதிகாரிகள் குறைத்து மதிப்பீடுவார்கள். வேலையில் மேல் அதிகாரிகள் குறைத்து மதிப்பீடுவார்கள். உங்களுக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் முக்கியத்துவம் குறைய வாய்ப்புகள் உண்டாகும். உங்களிடமிருந்து உதவி பெற்றவர்கள் உங்களுக்கு உதவாமல் கைவிரிப்பார்கள். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உங்களிடமிருந்து விலகிச் செல்வார்கள். நீங்கள் நம்பியவகர்களே உங்களை ஏமாற்றுவார்கள். குழந்தைகளால் பிரச்சினைகள் ஏற்படும்.

இதையும் படிங்க : சாணக்கிய நீதி படி உங்கள் வாழ்க்கையில் தோல்விகள் வராமல் இருப்பதற்கு உங்களிடம் இருக்கக்கூடிய குணங்கள் என்ன தெரியுமா?

விருச்சிகம்: இந்த ராசியின் நான்காவது வீட்டில் ராகு சஞ்சரிப்பதால், சனியின் பலன்களை சற்று அனுபவிப்பீர்கள். அதிக முயற்சி எடுத்து செய்தாலும் குறைவான பலன் மட்டுமே கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் சந்தோஷம் குறையலாம். குழந்தைகள் படிப்பில் ஆர்வமில்லாமல் போக வாய்ப்பு உள்ளது. அம்மாவின் உடல் நலனில் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் வேலையின் முக்கியத்துவம் குறையக்கூடும். பிரச்சனைகளும் பதட்டங்களும் மேலோங்கும்.

மகரம்: இந்த ராசியின் 2 வது வீட்டில் ராகு சஞ்சரிப்பதால் ராகுவின் சஞ்சலம் காரணமாக எதிர்பாராத செலவுகளை இந்த ராசிக்காரர்கள் சந்திக்க கூடும். உங்கள் உறவினர்களும் நண்பர்களும் உங்களின் பணத்தில் மட்டுமே கவனம் செலுத்திக்கொண்டு இருப்பார்கள். ஆனால் உங்களுக்கு ஒருபோதும் உதவி செய்ய மாட்டார்கள். பேச்சில் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். குடும்பத்தில் அடிக்கடி முரண்பாடுகள் வாக்குவாதங்கள் வர வாய்ப்புகள் உள்ளது. குடும்ப உறுப்பினர்களுக்கான செலவுகள் கணிசமாக கூடும். முக்கியமான சுப நிகழ்ச்சிகள் தள்ளிப்போகும்.

மீனம்: செலவு செய்ய கூடிய இடத்தில் ராகுவின் சஞ்சலம் காரணமாக இந்த ராசிக்காரர்கள் தங்கள் கடின உழைப்புகள் இருந்தும் விரும்பிய பலன்கள் கிடைக்காமல் போகலாம். உங்களின் கடின உழைப்பின் பெரும்பகுதி வீணாகும். மருத்துவச் செலவுகள் கூடும். உறவினர்களால் நிதி இழப்பு வருவதற்கு வாய்ப்புள்ளது. நீங்கள் எங்கு பணத்தை முதலீடு பண்ணினாலும், நஷ்டம் அடைவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். இந்த ராசிக்காரர்கள் கொடுக்க வேண்டிய பணத்தின் மீது அதிக அழுத்தம் வரும். உங்கள் தொழில், வேலைகளில் புதிய எதிரிகள் வந்து தொல்லை கொடுக்க வாய்ப்பு உள்ளது.

rahu ketu peyarchi 2025
rahu ketu peyarchi 2025

ராகு பகவான் சாதகமாக இல்லாத இந்த ஆறு ராசிக்காரர்களும், நாள்தோறும் காலையில் சுப்ரமணிய அஷ்டகம் அல்லது ஸ்கந்த ஸ்தோத்திரத்தை கூறி ஒவ்வொரு தினத்தையும் தொடங்குவது மிகவும் நல்லது. முடிந்தவரை விநாயகர் மற்றும் முருகன் கோவிலுக்குச் சென்று பிரார்த்தனை செய்வது மிகவும் நல்லது.

(இந்த தகவல்கள் அனைத்தும் ஆன்மிக நம்பிக்கையின்படி சொல்லப்பட்டுள்ளது. இதற்கு எந்த ஒரு அறிவியல் விளக்கமும் கிடையாது. இதற்கு வி தமிழ் நியூஸ் பொறுப்பேற்காது)

இதையும் படிங்க : இட்லி, தோசை சாப்பிட்டு போர் அடித்துவிட்டதா..? சுவையான கார பணியாரம் பண்ணி சாப்பிடுங்க..!

மேலும் சுவாரஸ்யமான செய்திகளுக்கு வி தமிழ் நியூஸ் வாட்ஸ்அப் whatsapp சேனலை கிளிக் செய்து பின்தொடரவும்

Related Latest News