Redin Kingsley Married Serial Actress Sangeetha: ரெடின் கிங்ஸ்லி – சங்கீதா இவர்களின் திருமணத்திற்கு திரைத்துறை பிரபலங்களும் மற்றும் ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டு வருகின்றனர்.
சந்தானம் நடித்த ஏ 1, நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா போன்ற திரைப்படங்களில் நடித்து புகழ் அடைந்தவர் ரெடின் கிங்ஸ்லி.

1977ஆம் வருடம் தூத்துக்குடி மாவட்டத்தில் இவர் பிறந்தார்.இவருக்கு 46 வயது ஆகிறது.அஜித்குமார் நடித்த அவள் வருவாளா திரைப்படத்தில் ருக்கு ருக்கு பாடலில் இவர் நடனமாடியிருப்பார்.அதற்கு பிறகு இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை.
இந்த நிலையில் பெங்களூர் மற்றும் சென்னையில் நடைபெறும் அரசு நிகழ்ச்சி ஏற்பாட்டு செய்யும் தொழிலினை செய்து வந்தார்.அப்போது இயக்குனர் நெல்சன் திலீப் குமாருடன் நட்பு ஏற்பட்டது.

அதன் காரணமாக சிலம்பரசன் நடிப்பில் நெல்சன் இயக்கவிருந்த வேட்டை மன்னன் திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமானார்.ஆனால் அந்த படம் பாதியிலேயே நின்று போய்விட்டது.ஆகவே இவருக்கு படவாய்ப்புகள் தொடராமல் போனது.

இதை அடுத்து நெல்சன் திலீப் குமார் இயக்கிய திரைப்படமான கோலமாவு கோகிலாவில் நயன்தாராவுடன் நடித்தார்.அந்த திரைப்படத்தில் இவருடைய கதாபாத்திரம் நல்ல வரவேற்பை பெற்றது.அதன் பிறகு நடிகர் சந்தானம் நடித்த A1 படத்திலும் நடித்திருந்தார்.
Also Read
- டிராகன் படத்தில் நடித்த நடிகை அடுத்து யாருடன் நடிக்கிறார் என்று தெரியுமா?
- 22 ஆண்டுகள் நிறைவு செய்த த்ரிஷாவிற்கு சைலண்டா சூர்யா 45 அண்ட் டீம் கொடுத்த டிரீட் !
- என்ன ஆனது சமந்தாவிற்கு? சமந்தாவைப் பார்த்து ரசிகர்கள் கவலை…
- பிக் பாஸால என் லைஃபே போச்சு-மனவேதனையில் டைரக்டர் வாசுவின் மகன் சக்தி சொன்னது
- சிட்டிசன் படத்தில் நடித்த வசுந்தரா தாசுக்கு இவ்வளவு பெரிய மகனா? ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன நடிகை!

அதன் மூலம் ரஜினிகாந்தின் அண்ணாத்த,ஜெயிலர்,சிவகார்த்திகேயனின் டாக்டர்,மற்றும் விஜயுடன் பீஸ்ட் போன்ற திரைப்படங்களில் நடித்தார்.அப்படங்களில் அவரின் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது.அதனை தொடர்ந்து திரைபடவாய்ப்புகள் அடுத்தடுத்து வர தொடங்கின.
Redin Kingsley Married Serial Actress Sangeetha:

தற்போது தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக மிகவும் பிசியாக இருக்கிறார்.ரெட்டின் கிங்ஸ்லி,நடிகை சங்கீதாவை திருமணம் செய்துகொண்டார்.

இன்று இவரது திருமணம் சென்னையில் நடைபெற்றது.மாஸ்டர் திரைப்படத்தில் சங்கீதா டாக்டராக நடித்திருப்பார். இதை தவிர பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
Watch Video: வாழைப்பூ ,வாழைக்காய் இவற்றை நறுக்கும் போது கைகளில் பிசுபிசு என்று பால் ஒட்டாமலிருக்க

இந்த நிலையில் நடிகை சங்கீதா இன்று திருமணம் செய்து கொண்டார்.இவர்களுடைய திருமணத்திற்கு திரைத்துறையை சேர்ந்த பிரபலங்களும்,ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
Read Also : “நாய்களுக்கு உதவ முன்வாருங்கள்… “வேதனையோடு ஸ்டோரி போட்ட த்ரிஷா..