HOME

STORIES

google-news

FOLLOW

JOIN

FOLLOW

தமிழ்நாடு

சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் சிபிசிஐடி விசாரணை கேட்ட வழக்கறிஞருக்கு சம்மன்..

சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் சிபிசிஐடி விசாரணை கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்த வழக்கறிஞருக்கு சம்மன், ஆஜராக வந்த வழக்கறிஞரை மிரட்டும் காவல்துறை உயர் அதிகாரிகள், வாக்குவாதம் நேரடி காட்சிகள் :

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த ரூரல் ஊராட்சியில் கடந்த வாரம் கல்லூரிக்கு வந்த மாணவி ஒருவர், இன்ஸ்டாகிராம் மூலம் ஏற்பட்ட பழக்கத்தில் அப்பகுதியைச் சேர்ந்த அபிநாத் என்பவரை சந்தித்தார் தொடர்ந்து அப்ப பகுதியில் 3 நாட்கள் தலைமுறை வாக இருந்த நிலையில், அவரை எட்டுக்கும் மேற்பட்டோர் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது இது தொடர்பாக முதல் நாள் இரவு ஆறு பேரை கைது செய்த காவல்துறையினர் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்து சிறைக்கு அனுப்பும் நேரத்தில், அபிநாத் என்பவரை மட்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மற்ற ஐந்து பேரை எந்தவித வழக்கும் பதிவு செய்யாமல் வீட்டுக்கு அனுப்பினர்.

25 ஆம் தேதி காணாமல் போன பெண்ணை 28ஆம் தேதி வரை மறைத்து வைத்திருந்து வன்கொடுமை செய்த சம்பவத்தில் சிபிசிஐடி விசாரணை வேண்டுமென்று மயிலாடுதுறையைச் சார்ந்த சமூக ஆர்வலரும் வழக்கறிஞருமான சங்கமித்ரன் என்பவர் மாவட்ட ஆட்சியருக்கு புகார் அளித்திருந்தார். இந்நிலையில் அவருக்கு மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இருந்து இந்த வழக்கு தொடர்பாக ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

விசாரணைக்காக மகளிர் காவல் நிலையம் முன்பு மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சாந்தி என்பவர் விசாரணை மேற்கொண்ட போது அங்கு வந்த மயிலாடுதுறை டிஎஸ்பி திருப்பதி வழக்கறிஞரை பார்த்து மிரட்டும் வகையில் பேசினார். இதை அடுத்து காவல் நிலையத்திற்கு வெளியே வந்த வழக்கறிஞர் சங்கமித்திரனுக்கும் மயிலாடுதுறை டிஎஸ்பி திருப்பதிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

சங்கமித்ரன் வழக்கறிஞர்

இருவரும் மாறி மாறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு வழக்கில் நியாயம் வேண்டுமென்று புகார் அளிக்கக்கூட முடியாத நிலை மயிலாடுதுறை மாவட்டத்தில் நிலவுவதாகவும் புகார் அளித்தால் காவல் நிலையம் கூப்பிட்டு மிரட்டுகிறார்கள் என்றும் வழக்கறிஞர் சங்கமித்தரன் தெரிவித்தார்.

மேலும் சுவாரஸ்யமான செய்திகளுக்கு வி தமிழ் நியூஸ் வாட்ஸ்அப் whatsapp சேனலை கிளிக் செய்து பின்தொடரவும்

Related Latest News