HOME

STORIES

google-news

FOLLOW

JOIN

FOLLOW

செய்தி

சீர்காழியில் மளிகை கடை உரிமையாளர் வீட்டில் திருடிய மூன்று பேர் கைது..

sirkali home theft 3 person arrested

sirkali home theft 3 person arrested : சீர்காழியில் மளிகை கடை உரிமையாளர் வீட்டில் 65 பவுன் நகை மற்றும் ஒரு வெள்ளி திருடிய 3 பேர் கைது,நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் மீட்பு

sirkali home theft 3 person arrested
sirkali home theft 3 person arrested

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி இரணியன் நகரை சேர்ந்த சேகர் வயது.53. இவர் அரசு மருத்துவமனை சாலை ஓரப்பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். சேகர் கடந்த 10 தேதி கடைக்கு வந்து விட்டார். அந்த நிலையில் அவரது மனைவி ரேணுகா வீட்டில் சமையல் வேலையை முடித்துவிட்டு மதியம் 12:30 மணிக்கு கடைக்கு வந்துள்ளார்.அதனை தொடர்ந்து தனது வீட்டிற்கு சேகர் சாப்பிடுவதற்காக சென்றுள்ளார். அப்போது கேட் உடைக்கப்பட்டு, கதவு கள்ள சாவி கொண்டு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

sirkali home theft 3 person arrested

தொடர்ந்து வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பூஜை அறையில் இருந்த ஒரு கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 65 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. சீர்காழி போலீசார் இது குறித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு, அருகில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி நகை மற்றும் வெள்ளிப் பொருள்களை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து சீர்காழி போலீசார் வழக்குபதிவு செய்து ஆய்வாளர் சிவகுமார் தலைமையில் போலீசார் புதிய பேருந்து நிலையம் அருகே வாகன தனிக்கையில் ஈடுப்பட்டனர்.

இதையும் படிங்க : உலகின் மிக பெரிய 10 பணக்கார குடும்பங்கள்

அப்போது அவ்வழியாக நடந்து வந்த நபரை பிடித்து விசாரணை செய்த போது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். அவரை பிடித்து வந்து காவல்நிலையத்தில் வைத்து விசாரணை செய்ததில் சீர்காழி அருகே தில்லைவிடங்கன் கிராமத்தை சேர்ந்த ஜெயராஜ் (35), நிம்மேலி புதுப்பேட்டையை சேர்ந்த அருண்குமார், ராதாநல்லூரை சேர்ந்த சுபாஷ்(30) ஆகிய மூன்று பேரும் சேர்ந்து 65 சவரன் நகை,1 கிலோ வெள்ளி பொருட்களை திருடி உப்பனாறு ஆற்று கரையோரம் நகைகளை குழி தோண்டி புதைத்து வைத்துள்ளதாக தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் 65′ பவுன் நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்தனர்.

இதையும் படிங்க : மகளிர் திட்டம் சார்பில் மதிசுடர் ஆயத்த ஆடை உற்பத்திஅலகு மையத்தை திறந்து வைத்த மாவட்ட ஆட்சியர்

மேலும் சுவாரஸ்யமான செய்திகளுக்கு வி தமிழ் நியூஸ் வாட்ஸ்அப் whatsapp சேனலை கிளிக் செய்து பின்தொடரவும்

Related Latest News