தமிழ் மொழி மீது கொண்ட பற்று காரணமாக, தமிழ்நாடு உருவான தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறையில் தனது வீட்டில் திருவள்ளுவர் சிலை திறந்த மென்பொருள் பொறியாளர்.
software engineer open thiruvalluvar silai
மயிலாடுதுறை மாவட்டம் சேந்தங்குடி ராமலிங்க நகரை சேர்ந்தவர் மென்பொருள் பொறியாளர் பவானீஸ்வரன். இவர் தற்போது பெங்களூரில் பணியாற்றி வருகிறார். பெங்களூரு பகுதியில் திருவள்ளுவர் சிலைக்கு எதிர்ப்பு கிளம்பியதால், தனது சொந்த ஊரில் திருவள்ளுவர் சிலை திறக்க முடிவு செய்து, ராமலிங்க நகரில் உள்ள தனது வீட்டில் திருவள்ளுவருக்கு மார்பளவு சிலை அமைத்துள்ளார்.

இதையும் படிங்க : தமிழ்நாட்டில் நீங்கள் பார்க்க வேண்டிய டாப் 10 அழகான கடற்கரைகள்!
சென்னை மாகாணத்தில் இருந்து மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட தினம் இன்று தமிழ்நாடு தினமாக தமிழக அரசு கொண்டாடுகிறது இதனை முன்னிட்டு திருவள்ளுவர் சிலையை நகரின் முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் இன்றைய காவல்துறை ஓய்வு பெற்ற துணை கண்காணிப்பாளர் சச்சிதானந்தம் திறந்து வைத்தார். விழாவில் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.