HOME

STORIES

google-news

FOLLOW

JOIN

FOLLOW

சுற்றுலா

மாசு ஏற்படாத இயற்கை அழகு, நீர்வீழ்ச்சிகள், பள்ளத்தாக்குகள் – தென்னிந்தியாவின் சிரபுஞ்சியை பற்றி தெரியுமா?

South India's Cherrapunji

தென்னிந்தியாவின் சிரபுஞ்சி என்று அழைக்கப்படும் ‘அகும்பே’ இந்தியாவிலேயே அதிக மழைப்பொழிவை பெறும் பகுதிகளில் ஒன்றாகும். கர்நாடகாவின் ஷிமோகா மாவட்டத்தில் அமைந்துள்ள அகும்பே, இயற்கை அழகாலும், வசீகரத்தாலும் மற்றும் பல்லுயிர் பெருக்கத்தாலும் நம்மை வியக்க வைக்கிறது. சுமையான மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள அகும்பே, இயற்கை ஆர்வலர்கள் மற்றும் சாகச விரும்பிகள் கண்டிப்பாக காண வேண்டிய இடமாகும். இந்த அமைதியான கிராமம் அதன் பிரமிக்கவைக்கசெய்யும் சூரிய அஸ்தமனம், அடர்ந்த மழைக்காடுகள்,அருவிகள் மற்றும் பள்ளத்தாக்குகள் ஆகியவற்றிற்கு புகழ் வாய்ந்தது. இந்த அழகிய பகுதிக்கு எப்போது போக வேண்டும்? என்னென்ன இடங்களுக்கு எல்லாம் சென்று சுற்றிப் பார்க்க வேண்டும் என்று காண்போம்!

South India's Cherrapunji
South India’s Cherrapunji

South India’s Cherrapunji

பர்கானா நீர்வீழ்ச்சி

பாலேஹள்ளி வனப்பகுதிக்குள் அமைந்துள்ளது பர்கானா நீர்வீழ்ச்சி கும்பேயில் காண வேண்டிய முக்கிய இடங்களில் ஒன்றாகும். பர்கானா என்னும் பெயருக்கு ஒரு பின்னணி இருக்கிறது. பர்கா என்கிற பெயருக்கு “சுட்டி மான்” என்று அர்த்தம். மேலும் இவை பொதுவாக அகும்பே காடுகளில் தான் காணப்படுகின்றன. அதனால் இந்த இடத்திற்கு “பர்கானா நீர்வீழ்ச்சி” என்று பெயர் வந்தது. இந்த “பர்கானா நீர்வீழ்ச்சி” இந்தியாவின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சிகளில் ஒன்றாகும், இந்த மலையேற்றத்தை மேற்கொள்வது மதிப்புக்குரியது, மேற்குத் தொடர்ச்சி மலைகளின் வசீகரிக்கும் அழகை நீங்கள் ரசிப்பதற்கு பர்கானா காட்சிப் புள்ளியாகும்.

மழைக்காடு ஆராய்ச்சி நிலையம்

அகும்பே அதன் மழைக்காலத்திற்கு ரொம்பவும் பிரபலமானது. அடர்ந்த மழைக்காடுகள் மற்றும் ஆறுகள் உள்ளதால், மற்ற இடங்களுடன் ஒப்பிடும்போது அவை கூடுதலான மழையைப் பெறுகின்றன. மேலும் இந்த இடத்தின் முக்கியமாக ஈர்க்க கூடிய ஒன்று அகும்பே மழைக்காடு ஆராய்ச்சி நிலையம் (ARRS). 2005 ம் ஆண்டு ரோமுலஸ் விட்டேக்கரால் நிறுவப்பட்ட இந்தியாவின் ஒரே மழைக்காடு ஆராய்ச்சி நிலையம் இதுவாகும். இது இந்தியாவில் மழைக்காடுகளை பாதுகாக்க வேண்டிய நோக்கத்திற்காக உருவாக்கப்பட்ட சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையம் ஆகும். இந்த நிலையம் அகும்பேயில் இருக்கும் காப்புக்காடுகளுக்குள் அமைந்துள்ளது, இது ஒரு குறிப்பிடத்தக்க சுற்றுலா தலமாக இருக்கிறது.

சன்செட் பாயின்ட்

பிரதான நகரத்திலிருந்து 10 நிமிட நடைப்பயணத்தில் இருக்கிறது. பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் தங்கள் விடுமுறையின் முதல் பகுதியாக சூரிய அஸ்தமனத்தை தான் பார்வையிடுவார்கள், மேலும் மேற்குத் தொடர்ச்சி மலையின் மிக உயரமுள்ள சிகரத்திலிருந்து காட்சியளிக்கிறது. மேகங்களில் பலவிதமான சாயல்களை விட்டு, சூரிய அஸ்தமனத்தை காண்பதை விட சுவாரஸ்யமானது எதுவாக இருக்க முடியும்?

கோபால கிருஷ்ணர் கோவில்

பழங்கால மத வழிபாட்டு ஆலயங்கள் மற்றும் கலைகளை ஆராய்ச்சி செய்வதில் நீங்கள் ஆர்வமாக இருந்தால், அகும்பேயில் நீங்கள் காண வேண்டிய இடங்களின் லிஸ்டில் கோபால கிருஷ்ணா கோயிலும் இருக்க வேண்டும். இது கர்நாடகாவின் அகும்பேவில் இருக்கும் கப்பினாலே கிராமத்தில் அமைந்துள்ளது. இந்த தலம் வரலாற்று மதிப்பைக் கொண்டுள்ளது மற்றும் அகும்பேயில் அவசியம் பார்க்க வேண்டிய இடமாகும். இந்த ஆலயமானது அழகிய இடைக்கால சிற்பங்கள் மற்றும் உருவங்களால் அலங்கரிக்கப்பட்டு இருக்கிறது, அவை ஹொய்சாளர் காலத்தில் உருவாக்கப்பட்டது.

ஜோகி குண்டி நீர்வீழ்ச்சி

அகும்பே அதன் நீர்வீழ்ச்சிகளுக்கு நன்கு அறியப்பட்டாலும், ஜோகி குண்டி நீர்வீழ்ச்சி உங்கள் கர்நாடக சுற்று பயணத்தின் போது அவசியம் பார்க்க வேண்டிய மற்றொன்று. இந்த அற்புதமான நீர்வீழ்ச்சி அகும்பேயிலிருந்து பர்கானா நீர்வீழ்ச்சிக்கு போகும் வழியில் அமைந்துள்ளது. பாறைகளுக்கு அடியில் இருக்கும் பெரிய குளத்திற்கு 20 அடி உயரத்திலிருந்து தண்ணீர் கொட்டுகிறது. இந்த நீர்வீழ்ச்சியானது ஒரு குகையிலிருந்து உருவாகிறது மற்றும் மலைகள் வழியாக செல்கிறது. பின்னர், இது மலாபஹாரி நதியோடு இணைகிறது. உங்கள் கேமராவில் படம் பிடிக்க முழு இடமும் மிகவும் அழகாக உள்ளது.

சோமேஸ்வரா வனவிலங்கு சரணாலயம்

அகும்பேக்கு கீழே சோமேஸ்வரா வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ளது மற்றும் இந்தியா முழுவதும் குறைவாக தோன்றும் அரிய விலங்குகளை இங்கே நீங்கள் பார்க்கலாம். சோமேஸ்வரா வனவிலங்கு சரணாலயம், சீதா நதியின் இயற்கையான முகாம்களுக்கு சொந்தமானது. இது கர்நாடக அரசின் வனத்துறையால் நடத்தப்படுகிறது. எனவே, நீங்கள் சரணாலயத்திற்கு வருகை புரியும் போது, நீங்கள் அகும்பே காடுகளுக்குள் முகாமிடும் அனுபவத்தையும் பெறலாம். இந்த வனவிலங்கு சரணாலயம் உங்களை திகைக்க செய்யும் பல அரிய வகை விலங்குகளின் தாயகமாகும்.

அச்சகன்யா நீர்வீழ்ச்சி

கர்நாடகாவின் ஆராயப்படாத பகுதிகளை ஆராய வேண்டும் என்பதில் நீங்கள் ஆர்வமாக இருந்தால், அச்சகன்யா நீர்வீழ்ச்சி உங்களுக்கு சரியான பகுதியாக இருக்கும். இந்த அருவிகள் ஷராவதி ஆற்றிலிருந்து மேற்கு தொடர்ச்சி மலையின் அடர்ந்த காடுகளின் பள்ளத்தாக்குகளின் வழியாக பாய்கின்றன. இந்த நீர்வீழ்ச்சியின் உயரம் சுமார் ஆறு முதல் ஏழு அடி வரை இருக்கும். மழைக்காலத்தில், பசுமையால் சூழப்பட்ட சிறிய குளத்தில் தண்ணீர் பாய்வதைப் பார்ப்பது மிகவும் நம் எல்லோரையும் குதூகலமாக்குகிறது.

அகும்பே ஏரி

ஷிமோகாவின் இந்த வசதியான சின்ன கிராமத்தின் முக்கிய ஈர்ப்புகளில் ஒன்று அகும்பே ஏரி. அவை அகும்பே மழைக்காடு சோதனைச் சாவடிக்கு அருகில் அமைந்து இருக்கிறது. இங்கு வருவதற்கு ஏற்ற நேரம் காலை வேளையாகும், ஏனென்றால் அது அழகாக பனிமூட்டமாக காணப்படும், மேலும் இதுபோன்ற அற்புதமான வானிலையில் ஏரியைப் பார்ப்பது மகிழ்ச்சி கொடுக்கிறது.

மேலும் சுவாரஸ்யமான செய்திகளுக்கு வி தமிழ் நியூஸ் வாட்ஸ்அப் whatsapp சேனலை கிளிக் செய்து பின்தொடரவும்