HOME

STORIES

google-news

FOLLOW

JOIN

FOLLOW

பொழுதுபோக்கு

22 ஆண்டுகள் நிறைவு செய்த த்ரிஷாவிற்கு சைலண்டா சூர்யா 45 அண்ட் டீம் கொடுத்த டிரீட் !

Suriya45 team surprise trisha

இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் தான் கங்குவா. அதிக எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரைக்கு வந்த கங்குவா படம் முதல் நாள் முதல் ஷோவிலேயே ரசிகர்களிடையே எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன் பிறகு நாளுக்கு நாள் நெகட்டிவ் விமர்சனங்கள் கங்குவா பெற்று வந்தது. கங்குவா திரைப்படம் கிட்டத்தட்ட ரூ.350 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு உலகம் முழுவதும் வெளியாகி மொத்தமாக ரூ.106 கோடி வரை வசூல் குவித்து மோசமான சாதனையை படித்துஇருக்கிறது.

Suriya45 team surprise trisha
Suriya45 team surprise trisha

Suriya45 team surprise trisha

கங்குவா படத்தைத் தொடர்ந்து சூர்யா இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் நடித்து முடித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் தான் இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநரும் நடிகருமான ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தன்னுடைய 45ஆவது படத்தில் நடித்து வருகின்றார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன்பே பூஜையுடன் தொடங்கியது. இப்படத்தின் பூஜை கோவையில் உள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் நடந்தது.

மேலும் சூர்யா 45 படத்திற்கு இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார் என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியான நிலையில் ஏ ஆர் ரஹ்மான் படத்திலிருந்து விலகினார். அதன் பிறகு புதிய இசையமைப்பாளராக சாய் அபயன்கர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சமீபத்தில் சூர்யா 45 படத்தில் த்ரிஷா நடிப்பதாக இணையத்தில் தகவல் வெளியாகி இருந்தது. தற்போது அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகி உள்ளது.

நேற்று உடன் அதவது DEC 13 2024 அன்று தான் த்ரிஷா சினிமா துறைக்கு வந்து 22 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளார். இதனை நினைவு கூறும் வகையில் எக்ஸ் பக்கத்தில் நன்றி தெரிவித்திருந்தார் த்ரிஷா. இந்த நிலையில் சூர்யா 45 படத்தில் அதிகாரப்பூர்வாக இணைந்து உள்ளதாக டிரீம் வாரியர்ஸ் பிக்ஸர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் முன் த்ரிஷா மற்றும் சூர்யா இருவரும் மௌனம் பேசியதே, ஆயுத எழுத்து, ஆறு படங்களில் நடித்திருந்தார். தற்போது சூர்யா 45 படத்தில் 4ஆவது முறையாக இணைந்துள்ளனர். மேலும் லப்பர் பந்து படத்தில் நடித்த நடிகை சுவாசிகா முக்கிய ரோலில் சூர்யா 45 படத்தில் நடிப்பதாகவும் தகவல் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : உங்கள் கைகளில் தோல் உரிகிறதா? என்ன காரணம் தெரியுமா? அதை எப்படி சரி பண்ணுவது?

மேலும் சுவாரஸ்யமான செய்திகளுக்கு வி தமிழ் நியூஸ் வாட்ஸ்அப் whatsapp சேனலை கிளிக் செய்து பின்தொடரவும்