HOME

STORIES

google-news

FOLLOW

JOIN

FOLLOW

Tamil Government Language Legislation Week : மயிலாடுதுறை மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை தமிழ் வளர்ச்சி துறை சார்பில், தமிழ் ஆட்சி மொழி சட்ட வாரவிழா பேரணியை கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகத்தில், தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில், தமிழ் ஆட்சி மொழி சட்ட வாரவிழாவை முன்னிட்டு, விழிப்புணர்வு பேரணியானது நடந்தது. இந்த பேரணியை மாவட்ட வருவாய் அதிகாரி மணிமேகலை அவர்கள் கொடி அசைத்து தொடங்கிவைத்தார்.

Watch Video : 5 லட்சம் கரும்புகளை அரசு கூட்டுறவு துறை மூலமாக நேரடியாக கொள்முதல் செய்ய கோரிக்கை

Tamil Government Language Legislation Week
Tamil Government Language Legislation Week

Tamil Government Language Legislation Week :

அந்த பேரணியானது கச்சேரி சாலையிலிருந்து பட்டமங்கள வீதி வழியாக சென்று, தியாகி நாராயணசாமி மேல்நிலை பள்ளியில் முடிந்தது. அங்கு தமிழ் வளர்ச்சியை பற்றி மாணவ -மாணவிகள் உரையாற்றினார்கள். இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட தமிழ் வளர்ச்சி துறை உதவி இயக்குனர் ஜோதிலட்சுமி முன்னிலையில் நடந்தது.

இந்த விழாவில் திருக்குறள் பேரவை தலைவர் செல்வகுமார் மற்றும் ஜெனிபர் பவுல்ராஜ், வர்த்தக சங்க தலைவர் மதியழகன், கல்லூரி பேராசியர்கள், 200 க்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள் பங்கேற்றுக்கொண்டு பேரணியை சிறப்பித்தார்கள்.

Read Also : பக்கா லவ் படம் DD3.. ஜிவி பிரகாஷ் தனுஷ் படம் குறித்து சொன்ன தகவல்..

மேலும் சுவாரஸ்யமான செய்திகளுக்கு வி தமிழ் நியூஸ் வாட்ஸ்அப் whatsapp சேனலை கிளிக் செய்து பின்தொடரவும்