இந்தியாவில் சில மாநிலங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் முன்னணியில் இருக்கின்றன. இந்த மாநிலங்கள் நாட்டின் பொருளாதாரத்தை வலுவடைய செய்கின்றன. இந்த 7 மாநிலங்களில் இருக்கும் பொருளாதார வலிமை மற்றும் தொழில்கள் இந்தியாவை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்கின்றன.
top 7 richest states in India

அந்த வகையில் இந்தியாவின் பணக்கார மாநிலமாக மகாராஷ்டிரா இருக்கிறது. இந்த மாநிலத்தின் தலை நகரமான மும்பை, 31 டிரில்லியனுக்கும் கூடுதலான GSDP (Gross State Domestic Product) – ஐ கொண்டுள்ளது. இந்தியாவின் முக்கிய நிதி நிறுவனங்களான மும்பை பங்குச் சந்தை, இந்திய ரிசர்வ் வங்கி, தேசிய பங்குச் சந்தை மற்றும் டாடா, கோத்ரெஜ், ரிலையன்ஸ் ஆகிய முக்கிய நிறுவனங்களும் இந்த மாநிலத்தில் தலைமையகத்தை கொண்டுள்ளன. அதுமட்டுமன்றி வெளிநாட்டு வங்கிகளின் கிளைகளும் இங்கு இருக்கின்றன.
நுகர்வோர் பொருட்கள் துறைகளை உள்ளடக்கிய உற்பத்தித் துறை மற்றும் தொழில்நுட்பம், தொழில் துறை மற்றும் வாகனம் இவைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. மேலும் மகாராஷ்டிராவின் கலச்சாரமும் உலக புகழ் வாய்ந்தவை.
மகாராஷ்டிராவுக்கு அடுத்த படியாக தமிழ்நாடு இருக்கின்றது. உற்பத்தி துறையில் தனக்கென்று தனி இடம் பிடித்துள்ளது தமிழ்நாடு. அதன்படி 20 டிரில்லியனுக்கும் கூடுதலான GSDP-யை கொண்டு பொருளாதார பலம் வாய்ந்த நாடாக இருக்கிறது. குறிப்பாக தமிழ்நாடு ஜவுளி வர்த்தகம் மற்றும் ஆடை தொழிலுக்காக நன்கு அறியப்படுகிறது.
தமிழ் நாட்டின் மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சமாக வாகன தொழில் திகழ்கிறது. தகவல் தொழில் நுட்பத்தில் மிகுந்த முன்னேற்றத்தை கண்டுள்ள தமிழ்நாடு, உலகம் முழுவதும் முதலீடு செய்திருக்கிறது. அதுமட்டுமன்றி பல்வேறு சாதனையாளர்களை கொண்டுள்ளதால் உலகம் முழுவதும் நன்கு அறியப்படுகிறது.
அந்த வகையில் குஜராத் தமிழ்நாட்டுக்கு அடுத்ததாக பெரிய தொழில் நிறுவனங்களை கொண்ட மாநிலமாக இருக்கிறது. இந்த மாநிலம் சுமார் 20 டிரில்லியன் GSDP-யை கொண்டிருக்கிறது. இது உலக அளவில் பெட்ரோ கெமிக்கல் மற்றும் மருந்துத் துறைகளில் முக்கிய பங்கு வகிக்கிறது.
Also Read
குஜராத்தின் தொழில் துறைகள், உற்பத்தி, ஏற்றுமதி, முதலீடுகள் போன்றவை நாட்டின் பொருளாதார நிலையை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்கின்றன. சர்தார் சரோவர் அணையானது விவசாயத் துறையையும் மேம்படுத்துகிறது, இது மாநிலத்தின் உணவு பாதுகாப்பு மற்றும் கிராமப்புற பொருளாதாரம் இவற்றின் அடிப்படையாகும்.
நாட்டின் விவசாய உற்பத்தியில் உத்தரபிரதேச மாநிலம் முக்கிய பங்கு வகிக்கிறது. இது நாட்டிற்கு உணவு பாதுகாப்பை அளிக்கும் மாநிலமாக இருக்கிறது. அதன்படி சுமார் 19.7 டிரில்லியன் GSDP-யை கொண்டுள்ளது. அரிசி, கோதுமை, கரும்பு, உருளைக்கிழங்கு உள்ளிட்ட பல பயிர்களுக்கு உத்தரபிரதேசம் மிகவும் முக்கியமானது. சேவைத் துறை, சுற்றுலா, தகவல் தொழில்நுட்பம் போன்றவை நாட்டின் பொருளாதாரத்திற்கு மேலும் பலமூட்டுகின்றன.
பட்டியலில் அடுத்ததாக சிலிக்கான் நகரம் என கூறப்படும் பெங்களூருவை தலைமை இடமாக கொண்டுள்ள கர்நாடகா இருக்கிறது. பெங்களூரில் அமைந்துள்ள IT நிறுவங்கள் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. பெங்களூரில் இருக்கும் ஐடி நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் அதிகரித்து பொருளாதாரம் வளர பயன்படுகின்றன.
இதற்கு அடுத்தபடியாக மேற்கு வங்கம் இருக்கிறது. இந்த மாநிலத்தின் பொருளாதாரம் 13 டிரில்லியனுக்கும் கூடுதலான GSDP உடன், கலாச்சார பாரம்பரியம் மற்றும் வணிகங்களுக்கு முன்னுரிமை கொடுக்கிறது. இந்த மாநிலத்தின் தலைநகர் கொல்கத்தாவில் வரலாற்று சிறப்புமிக்க வர்த்தக துறைமுகம் இருக்கிறது. அதுமட்டுமன்றி அங்கிருக்கும் வணிக மையங்களும் முக்கியத்துவம் கொண்டவை.
கலாச்சார மையமாக திகழும் கொல்கத்தாவை ஆங்கிலேயர்கள் தலைநகராக வைத்துள்ள போது, அவர்கள் அறிமுகப்படுத்திய கட்டிடக்கலை மற்றும் கலையின் வடிவங்களை இன்றளவும் அங்கு காண முடியும். வரலாற்று இடங்களுடன், சணல், தேயிலை, எஃகு, டெக்ஸ்டைல்ஸ் உள்ளிட்ட பல தொழில்களுக்கு புகழ் வாய்ந்தவை. மேற்கு வங்கம் பாரம்பரியம் மற்றும் நவீனத்தின் தனித்துவமான கலவை கொண்டதாகும், மேலும் இந்த மாநிலத்தின் முன்னேற்றம் கவனத்தை ஈர்க்கிறது.
பட்டியலில் கடைசியாக ஆந்திர பிரதேசம் இருக்கிறது. இது 11.3 டிரில்லியன் GSDP-யை கொண்டுள்ளது. இந்த மாநிலத்தின் பல்வேறு துறைகளின் முன்னேற்றம் அதன் பொருளாதாரத்தை பிரதிபலிக்கிறது. அங்கு தகவல் தொழில்நுட்பம் மற்றும் பயோடெக்னாலஜிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
மாநிலத்தின் தலைநகரமான அமராவதியில் IT நிறுவனங்களின் எண்ணிக்கை கூடுதலாகியுள்ளன. வளர்ச்சித் தொழில்கள், இயற்கை வளங்கள் மற்றும் சிறந்த துறைகளில் பணிகள் ஆகியவற்றால் ஆந்திரப் பிரதேசம் பிரகாசமான பொருளாதார எதிர்காலத்துடன் முன்னேறி வருவதாக சொல்லப்படுகிறது.