HOME

STORIES

google-news

FOLLOW

JOIN

FOLLOW

தொழில்நுட்பம்

இன்டர்நெட் பயன்பாட்டில் முன்னணியில் இருக்கும் மாநிலங்கள் எவை? – தமிழ்நாடு எந்த இடம் உள்ளது தெரியுமா?

Which states are leading in internet usage

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) கொடுத்துள்ள தகவலின்படி, மார்ச் 2024 ஆண்டு நிலவரப்படி, நாட்டில் மொத்தம் 954.40 மில்லியன் இணைய சந்தாதாரர்கள் இருக்கின்றனர் என்று தகவல் தொடர்புத் துறை இணை மந்திரி டாக்டர். சந்திர சேகர் பெம்மாசானி நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார்.

பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருக்கும் கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் இணைய ஊடுருவலில் குறிப்பிடத்தக்க மாறுபாடுகளை எடுத்து சொல்லி, விரிவான தரவுகளை அமைச்சர் பகிர்ந்து கொண்டார். இந்தியா நகர்ப்புறங்களில் 556.05 மில்லியன் இணைய சந்தாதாரர்களும் கிராமப்புறங்களில் 398.35 மில்லியன் இணைய சந்தாதாரர்களும், உள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மொத்த இணைய சந்தாதாரர்களின் எண்ணிக்கையில் உத்தரப் பிரதேசம் (129.53 மில்லியன்) முதலாவது இடத்தில் இருக்கிறது. இருப்பினும், நகர்ப்புற இன்டர்நெட் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 65.76 மில்லியனாக இருக்கும். அதே வேளையில், கிராமப்புறங்களில் 63.77 மில்லியன் யூசர்கள் உள்ளனர். இது மாநிலத்திற்குள்ளே டிஜிட்டல் பிளவு குறைவதைக் எடுத்துக்காட்டுகிறது. மொத்த யூசர்களின் (109.75 மில்லியன்) அடிப்படையில் இந்தப் லிஸ்டில் இரண்டாவது இடத்தில் இருக்கும் மகாராஷ்டிரா, அதிக நகர்ப்புற இன்டர்நெட் சந்தாதாரர்களுடன் (75.99 மில்லியன்) முன்னணியில் இருக்கிறது. அதே நேரத்தில் கிராமப்புறங்களில் இன்டர்நெட் சந்தாதாரர்கள் எண்ணிக்கை 33.76 மில்லியன் என குறைவாக இருக்கிறது. இது மகாராஷ்டிரா மாநிலத்தின் பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் கணிசமான நகர்ப்புற மக்கள் தொகைகளை அடிக்கோடிட்டு காட்டுகிறது.

Which states are leading in internet usage
Which states are leading in internet usage

மொத்தம் 63.18 மில்லியன் இணைய பயன்பட்டாளர்களுடன் மேற்கு வங்கம் 3 வது இடத்தில் இருக்கிறது. மாநிலத்தில் 25.15 மில்லியன் கிராமப்புற பயனாளர்கள் மற்றும் 38.04 மில்லியன் நகர்ப்புற பயனாளர்கள் உள்ளனர். இது சீரான விநியோகத்தை காட்டுகிறது. அதற்கடுத்த இடத்தில் மொத்தம் 61.23 மில்லியன் இணையப் பயன்பாட்டாளர்களுடன் தமிழ்நாடு இடம் பெற்றுள்ளது. தமிழகத்தில் 44.00 மில்லியன் நகர்ப்புற சந்தாதாரர்கள் மற்றும் 17.23 மில்லியன் கிராமப்புற சந்தாதாரர்கள் உள்ளனர். இது மாநிலத்தின் குறிப்பிடத்தக்க நகர்ப்புற பயனர்கள் தளத்தை எடுத்துக்காட்டுகிறது. 57.88 மில்லியன் மொத்த இணைய யூசர்களுடன் கர்நாடகா 5 வது இடத்தைப் பிடித்துள்ளது. இதில் 37.09 மில்லியன் நகர்ப்புற சந்தாதாரர்கள் மற்றும் 20.79 மில்லியன் கிராமப்புற சந்தாதாரர்கள் உள்ளனர்.

அனைத்து மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, மிகக் குறைவான இணைய பயன்பாட்டாளர்கள் சிக்கிம் மாநிலத்தில் இருக்கின்றனர். இங்கு மொத்தமே 6,00,000 இன்டர்நெட் சந்தாதாரர்கள் மட்டுமே உள்ளனர். இதன் கிராமப்புற பகுதிகளில் (0.31 மில்லியன்) யூசர்கள் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் (0.29 மில்லியன்)யூசர்கள் மக்கள் தொகைக்கு இடையில் ஏறத்தாழ இணைய பயன்பாடு சமமாகவே இருக்கிறது. குறைந்த இன்டர்நெட் ஊடுருவலை பெற்றுள்ள மற்றொரு மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தில், 530,000 வில்லேஜ் யூசர்கள் மற்றும் 370,000 டவுன் யூசர்கள் என மொத்தம் 8,90,000 பயன்பாட்டாளர்கள் உள்ளனர்.

10 மில்லியனுக்கும் குறைவான மொத்த யூசர்களைக் கொண்ட மாநிலங்களின் லிஸ்டில் உத்தரகாண்ட் (9.84 மில்லியன்) ஹிமாச்சலப் பிரதேசம் (6.60 மில்லியன்), மணிப்பூர் (2.25 மில்லியன்), திரிபுரா (2.18 மில்லியன்), மேகாலயா (2.07 மில்லியன்), நாகாலாந்து (1.66 மில்லியன்) மற்றும் மிசோரம் (1.24 மில்லியன்) உள்ளிட்டவை உள்ளன. மறுமுனையில், அதிக எண்ணிக்கையிலான இணைய பயன்பாட்டாளர்களைக் கொண்ட யூனியன் பிரதேசமாக டெல்லி இருக்கிறது. இங்கு 35.18 மில்லியன் இன்டர்நெட் சந்தாதாரர்கள் உள்ளனர்.

டெல்லியைத் தொடர்ந்து ஜம்மு & காஷ்மீர் 9.55 மில்லியன் இணைய பயனகளுடன் 2 ம் இடத்தில் உள்ளது. மற்ற பகுதிகளுடன் ஒப்பிடும் போது புதுச்சேரி சிறியதாக இருந்தாலும், குறிப்பிடத்தக்க வகையில் 1.25 மில்லியன் இன்டர்நெட் யூசர்களைக் கொண்டுள்ளது. இது பிராந்தியத்தின் மக்கள் தொகையை கணக்கிடும் போது அதிக இன்டர்நெட் ஊடுருவல் விகிதத்தை பிரதிபலிக்கிறது. சண்டிகர் 1.32 மில்லியன் யூசர்களுடன் முக்கிய இடத்தைப் பிடித்தாலும், டாமன் மற்றும் டையூவை உள்ளடக்கிய தாத்ரா மற்றும் நகர் ஹவேலியில் 0.84 மில்லியன் இணைய பயனாளர்கள் உள்ளனர்.

மேலும் சுவாரஸ்யமான செய்திகளுக்கு வி தமிழ் நியூஸ் வாட்ஸ்அப் whatsapp சேனலை கிளிக் செய்து பின்தொடரவும்