ஆட்சி எப்படி நடத்த வேண்டும் என்று தெலுங்கானா ஆந்திரா போன்ற மாநிலங்களை பார்த்து திமுக அரசு கற்றுக்கொள்ள வேண்டும் வழக்கறிஞர் திருநாவுக்கரசு பேட்டி
தமிழகத்தில் தொடர்ந்து பட்டியல் சமூக மக்கள் மீது நடத்தப்படும் சாதிய வன்கொடுமைகளையும் ஆவண படுகொலைகளையும் கண்டித்து தமிழக அரசு சட்டப்பேரவையில் சிறப்பு கூட்டம் நடத்த வலியுறுத்தி தலித் மக்கள் முன்னணி தலைவர் வழக்கறிஞர் திருநாவுக்கரசு தலைமையில் நீதி கேட்கும் போராட்டம் சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் நடைப்பெற்றது.

இதில் திருத்தணி ராஜா நகரத்தில் 3சென்ட் நிலத்திற்கு 30ஆண்டுகளாக போராடி வரும் மக்களுக்கு நீதி வழங்கக்கோரி,வேங்கை வயலில் குடிக்கும் தண்ணீரில் மலத்தை கலந்த விவகாரத்தில் இது வரை குற்றவாளிகளை கண்டுப்பிடிக்காத காவல்துறைக்கு எதிராக பல்வேறு கோழங்கையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க : அனாதையா என் மகனோடு நடு ரோட்டில் நின்னேன்.. ஏன் வாழனும்னு நினைச்சேன்.. தீபா கண்ணீர் பேட்டி!
DMK government should learn
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் தலைவர் வழக்கறிஞர் திருநாவுக்கரசு பேசுகையில் ஆட்சி எப்படி நடத்த வேண்டும் என்று ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாநிலங்களை பார்த்து திமுக திராவிட மாடல் அரசு கற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.
மேலும் இப்போராட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக தமிழக புரட்சி கழக தலைவர் அரங்க குணசேகரன், டாக்டர் அம்பேத்கர் பேரவை பொதுச்செயலாளர் சைதை அன்பு தாசன், அம்பேத்கர் மக்கள் படை தலைவர் மதிபறையனார், அபயம் தலைவர் லெமூரியர், மற்றும் நீலப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பேராசிரியர் டாக்டர் புரட்சிமணி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
இதையும் படிங்க : பிஜேபி முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல ஒட்டு மொத்த இந்தியாவிற்கும் எதிரானது மமக அப்துல் சமது குற்றச்சாட்டு
மேலும் இதில் தலித் மக்கள் முன்னணியின் முக்கிய நிர்வாகிகள் பள்ளிப்பட்டு ரமேஷ் குமார், ஆறு கஜேந்திரன், ரமேஷ் பாபு, சைமன் சத்யா, சரத்பாபு உள்ளிட்டோர் மற்றும் தொண்டர்கள் பொது மக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி போன்ற பல கட்டுரைகளை படிக்க vtamiltv.com வில் பாருங்கள்.
இப்போதே படிக்க


