Home Stories Photos Videos Join
TRENDS
நடிகை கீர்த்தி பாண்டியனின் கிளாமர் ஸ்டில்ஸ்
ஸ்ரீலீலா அசத்தல் கிளிக்ஸ்
ஹைதராபாத் பெண் தொழிலதிபருடைய ரோல்ஸ்-ராய்ஸ் கார்!
வளர்ந்து வரும் கேரளா தொழிலதிபருடைய புது போர்ஷே கார்!
உலகின் பணக்கார பெண் ஃபிரான்ஷுவா பெட்டன் கோர்ட் னுடைய சொத்தின் மதிப்பு !

கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா விவாகரத்து அறிவிப்பு.. இணைந்து அறிவித்த நட்சத்திர தம்பதி!

மும்பை: இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு செர்பிய நடிகை மற்றும் மாடல் நடாஷா ஸ்டான்கோவிக்கை லவ் மேரேஜ் செய்து…

மும்பை: இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு செர்பிய நடிகை மற்றும் மாடல் நடாஷா ஸ்டான்கோவிக்கை லவ் மேரேஜ் செய்து கொண்டார். இவர்களுக்கு அகஸ்தியா என்ற மகன் இருக்கும் நிலையில் கடந்த சில வாரங்களாகவே இவர்கள் இருவரும் பிரிய போவதாக தொடர்ந்து இணையத்தில் தகவல்கள் வெளியாகின.

இது குறித்து ஹர்திக் மற்றும் நடாஷா இருவருமே மௌனமாக இருந்து வந்த நிலையில், நடாஷா தன்னுடைய பெயருக்கு பின்னால் உள்ள பாண்டியா என்ற பெயரை நீக்கியதும் சமூக வலைதளங்களில் இருவரும் ஒன்றாக இருந்த போடோக்களை நீக்கியது போன்ற செயல்களால் இவர்களது விவாகரத்து கிடத்திட்ட உறுதியானது. இந்நிலையில் தற்போது இருவரும் ஒன்றாக சேர்ந்து தங்களது பிரிவு பற்றிய அறிவிப்பை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.

Hardik Pandya divorce announcement (2)
Hardik Pandya divorce announcement

நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா: இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு செர்பியாவை சேர்ந்த நடிகை மற்றும் மாடல் நடாஷா ஸ்டான்கோவிக் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அகஸ்தியா என்ற மகன் இருக்கும் நிலையில், தொடர்ந்து பல்வேறு பிரச்சினைகளால் இவர்கள் பிரிய போவதாக கடந்த சில வாரங்களாகவே சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகி வந்தன. ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா விளையாடிய நிலையில் தொடர்ந்து அவருக்கு போட்டிகளின் போது உற்சாகம் செய்யும் நடாஷா நேரில் அந்த போட்டிகளில் கலந்து கொள்ளவில்லை.

அடுத்தடுத்த நடவடிக்கைகள்: இதேபோல, தொடர்ந்து இன்ஸ்டாகிராலும் ஹர்திக் பாண்டியா உடனான போடோக்களை அவர் நீக்கினார். இதனால் ஹர்திக் பாண்டியா மற்றும் நடாஷா ஸ்டான்கோவிக் இடையிலான பிரிவு ஏறக்குறைய உறுதியானது. இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் இந்திய அணி T20 WORLD CUP வென்று சாதனை செய்த போதிலும் நடாஷாவின் ஊக்கம் ஹர்திக்கிற்கு கிடைக்கவில்லை. இந்த தொடரின் இறுதிப்போட்டியில் கடைசி ஓவரை சிறப்பாக வீசிய ஹர்திக் பாண்டியா இந்திய அணி வெற்றி பெறுவதற்கு முக்கியமான காரணமாக அமைந்திருந்தார்.

Hardik Pandya divorce announcement (1)
Hardik Pandya divorce announcement

செர்பியா சென்ற நடாஷா: இதையடுத்து நாடு திரும்பிய பாண்டியாவிற்கு அவரது சகோதரர் க்ருணாள் பாண்டியா மற்றும் மகன் அகஸ்தியா போன்ற குடும்பத்தினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஆனால் இதிலும் நடாஷாவை காண முடியவில்லை. இந்நிலையில் மும்பையில் சில காலங்கள் தங்கியிருந்த நடாஷா, தனது சொந்த மண்ணான செர்பியாவிற்கு தன் மகனுடன் சென்று விட்டார். செர்பியாவை சேர்ந்த நடிகை மற்றும் மாடலான நடாஷா ஸ்டான்கோவிக் விமான நிலையத்தில் தனது மகனுடன் சென்ற வீடியோ வெளியான நிலையில், ஹர்திக் -நடாஷா பிரிவது உறுதியானது. சில நாட்களிலேயே ஹர்திக் இந்த முடிவை வெளியிடுவார் என்று எதிர்பார்ப்பும் வலுத்தது.

ஹர்திக் -நடாஷா பிரிவு அறிவிப்பு: இந்நிலையில் தற்போது தன்னுடைய விவாகரத்து முடிவை பற்றி ஹர்திக் பாண்டியா சமூக வலைதளத்தில் உறுதிப்படுத்தி உள்ளார். ஹர்திக் -நடாஷா இருவரும் ஒன்றாக இணைந்து இது பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இது மிகவும் கடினமான முடிவு என கூறி அவர்கள் தெரிவித்து உள்ளனர். ஆனால் மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கும் வகையில் இந்த முடிவை தாங்கள் இருவரும் சேர்ந்து எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் மகன் அகஸ்தியாவின் எதிர்காலத்திற்கு இருவரும் ஒன்று இணைந்து செயல்பட இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த கடினமான நேரத்தில் தங்களது உணர்வுகளுக்கு மதிப்பு அளித்து அனைவரும் ஒத்துழைப்பு தருவார்கள் என்று தான் நம்புவதாகவும் ஹர்திக் மற்றும் நடாஷா இருவரும் தெரிவித்து உள்ளனர்.

https://www.youtube.com/watch?v=QvTiOzoeexE
புதியது

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி போன்ற பல கட்டுரைகளை படிக்க vtamiltv.com வில் பாருங்கள்.

இப்போதே படிக்க