Home Stories Photos Videos Join
TRENDS
நடிகை கீர்த்தி பாண்டியனின் கிளாமர் ஸ்டில்ஸ்
ஸ்ரீலீலா அசத்தல் கிளிக்ஸ்
ஹைதராபாத் பெண் தொழிலதிபருடைய ரோல்ஸ்-ராய்ஸ் கார்!
வளர்ந்து வரும் கேரளா தொழிலதிபருடைய புது போர்ஷே கார்!
உலகின் பணக்கார பெண் ஃபிரான்ஷுவா பெட்டன் கோர்ட் னுடைய சொத்தின் மதிப்பு !

மறு வெளியீட்டில் கெத்து காட்டும் ஆண்டவரின் ‘இந்தியன்’.. ஆனால் கில்லி பட வசூலை விட குறைவு!

உலக நாயகன் கமல் நடிப்பில் கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியான படம் 'இந்தியன்'. பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் படைப்பாக ரிலீசான இப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும்…

உலக நாயகன் கமல் நடிப்பில் கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியான படம் ‘இந்தியன்’. பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் படைப்பாக ரிலீசான இப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பினை பெற்றது. வசூல் சாதனையில் சக்கை போடு போட்டது. இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான ஷூட்டிங் நிறைவடைந்து வெளியாக தயாராக உள்ளது. இந்நிலையில் ‘இந்தியன்’ படம் சமீபத்தில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

Kamal In Indian re-release

Kamal In Indian re release
Kamal In Indian re release

ஷங்கர் இயக்கத்தில் கமல், சுகன்யா, மனீஷா கொய்ராலா, ஊர்மிளா, கவுண்டமணி, செந்தில் மற்றும் கஸ்தூரி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியானது ‘இந்தியன்’. இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து இருந்தார்.

சுமார் 15 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்க பட்டதாக கூறப்படும் ‘இந்தியன்’ அன்றைய காலக்கட்டத்திலே பல மடங்கு வசூலை அள்ளி குவித்தது. கமல் அப்பா, மகனாக 2 விதமான பாத்திரங்களில் இப்படத்தில் நடித்திருந்தார். இதில் உலக நாயகனின் வயதான இந்தியன் தாத்தா கேரக்டர் ரசிகர்கள் மத்தியில் மிக பிரபலம்.

இந்நிலையில் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த இந்தியன் படம் தற்போது மறுவெளியீடு செய்யப்பட்டு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை கொடுத்து வருகிறது. கடந்த வாரம் வெள்ளிக்கிழமை ஜுன் 7 ஆம் தேதி ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ள ‘இந்தியன்’ முதல் நாளில் ரூ. 1.10 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய்யின் ‘கில்லி’ படம் ரீ ரிலீசான முதல் நாளில் 10 கோடி ரூபாய் வசூல் செய்து இருந்தது. இந்நிலையில் தற்போது ‘இந்தியன்’ அதில் ஒரு பகுதியாக 1.10 கோடி மட்டுமே வசூலித்து உள்ளதாக சொல்லப்படுகிறது. அதே நேரம் கடந்த வாரம் ரிலீசான மைக் மோகனின் ரீ என்ட்ரி படமான ஹரா மற்றும் வெப்பம் போன்ற புதிய படங்களின் வசூலை எல்லாம் பின்னுக்கு தள்ளி ‘இந்தியன்’ கூடுதலாக வசூலித்து மாஸ் காட்டியுள்ளது.

இதனை இணையத்தில் உலக நாயகனின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சுமார் 28 வருடங்களுக்கு பின் ‘இந்தியன்’ இரண்டாம் பாகத்தை இயக்கியுள்ளார் ஷங்கர். இப்படத்தில் கமலுடன் எஸ்.ஜே. சூர்யா, சித்தார்த், காஜல் அகர்வால் மற்றும் பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் சேர்ந்து நடித்துள்ளனர். இந்தியன் 2 பாகத்திற்கான படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து ரிலீசுக்கு தயாராகவுள்ளது வரும் ஜுலை 12 ஆம் தேதி ‘இந்தியன் 2’ படம் வெளியாக போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

புதியது

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி போன்ற பல கட்டுரைகளை படிக்க vtamiltv.com வில் பாருங்கள்.

இப்போதே படிக்க