Home Stories Photos Videos Join
TRENDS
நடிகை கீர்த்தி பாண்டியனின் கிளாமர் ஸ்டில்ஸ்
ஸ்ரீலீலா அசத்தல் கிளிக்ஸ்
ஹைதராபாத் பெண் தொழிலதிபருடைய ரோல்ஸ்-ராய்ஸ் கார்!
வளர்ந்து வரும் கேரளா தொழிலதிபருடைய புது போர்ஷே கார்!
உலகின் பணக்கார பெண் ஃபிரான்ஷுவா பெட்டன் கோர்ட் னுடைய சொத்தின் மதிப்பு !

ஆதரவற்று இறந்தவரின் உடலை அடக்கம் செய்த மயிலை கருணைக்கரங்கள்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூர் பகுதியில் ஆதரவற்ற நிலையில் யாசகம்  எடுத்து வந்த சுமார் 75 வயது மதிப்புடைய ஆறுமுகம் என்ற முதியவரை கடந்த சில…

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூர் பகுதியில் ஆதரவற்ற நிலையில் யாசகம்  எடுத்து வந்த சுமார் 75 வயது மதிப்புடைய ஆறுமுகம் என்ற முதியவரை கடந்த சில வருடத்திற்கு முன்னர் பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த மயிலை கருணைக்கரங்கள் என்ற அறக்கட்டளை நடத்தி வரும் தஞ்சை மகாதேவன் மற்றும் அவர் மனைவி ராஜேஸ்வரி ஆகிய இருவரும் முதியவரை மீட்டு அவரை தூய்மைப்படுத்தி புதிய ஆடை வழங்கி பொறையாரில் உள்ள காப்பகம் ஒன்றில் சேர்த்து பராமரித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் அந்த முதியவர் இறந்துவிட்ட நிலையில் தகவல் அறிந்து ஓடி சென்ற தஞ்சை மகாதேவன் மற்றும் மனைவி ராஜேஸ்வரி இருவரும் முதியவரின் உடலை பெற்று அவருக்கு அனைத்து இறுதி சடங்கு இறுதி மரியாதைகளையும் செய்து இடுகாட்டில் நல்லடக்கம் செய்தனர்.

ஆதரவற்ற நிலையில் இறந்த ஆறுமுகம் என்ற முதியவரின் உடலை பெற்ற பிள்ளைகள் போல் நாங்கள் இருக்கிறோம் என ஓடி சென்று அவர் உடலை பெற்று இறுதி சடங்கு இறுதி மரியாதை உடன் நல்லடக்கம் செய்துள்ளனர். இந்த நிகழ்வில் திருநங்கைகள் பாரதி கீர்த்தி ஆகிய இருவரும் கலந்து கொண்டு முதியவரின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.

அவரின் உடலை வணங்கி மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர் பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த மயிலை கருணைக்கரங்கள் அறக்கட்டளை நடத்தி வரும் தஞ்சை மகாதேவன் மற்றும் அவர் மனைவி ராஜேஸ்வரி ஆகிய இருவரும் இதுவரையில் சுமார் 80க்கும் மேற்பட்ட இறந்த ஆதரவற்ற முதியவர்களின் உடலை இறுதி சடங்கு இறுதி மரியாதை செய்து நல்லடக்கம் செய்து வந்துள்ளனர்.

புதியது

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி போன்ற பல கட்டுரைகளை படிக்க vtamiltv.com வில் பாருங்கள்.

இப்போதே படிக்க