Home Stories Photos Videos Join
TRENDS
நடிகை கீர்த்தி பாண்டியனின் கிளாமர் ஸ்டில்ஸ்
ஸ்ரீலீலா அசத்தல் கிளிக்ஸ்
ஹைதராபாத் பெண் தொழிலதிபருடைய ரோல்ஸ்-ராய்ஸ் கார்!
வளர்ந்து வரும் கேரளா தொழிலதிபருடைய புது போர்ஷே கார்!
உலகின் பணக்கார பெண் ஃபிரான்ஷுவா பெட்டன் கோர்ட் னுடைய சொத்தின் மதிப்பு !

‘நீங்கள் தனி ஆள் இல்லை ‘ இந்திய மல்யுத்த வீராங்கனைக்கு ஆதரவளித்து சமந்தா போட்ட பதிவு

சமந்தா, மல்யுத்த வீராங்கனைக்கு ஆதரவாக குரல் கொடுத்து உள்ள தகவல் தான் தற்போது வலைதளத்தில் வைரலாகி வருகிறது. சர்வதேச விளையாட்டுத் திருவிழான 33வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ்…

சமந்தா, மல்யுத்த வீராங்கனைக்கு ஆதரவாக குரல் கொடுத்து உள்ள தகவல் தான் தற்போது வலைதளத்தில் வைரலாகி வருகிறது. சர்வதேச விளையாட்டுத் திருவிழான 33வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் நாட்டின், பாரிஸ் நகரில் கடந்த ஜூலை 26 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகின்றது. இந்த ஒலிம்பிக் போட்டியில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,700 விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டு இருக்கிறார்கள். இதில் பலவிதமான விளையாட்டுப் போட்டிகள் அடங்கி இருக்கிறது.

மேலும், இந்த ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க இந்தியாவில் இருந்து 70 வீரர்கள், 47 வீராங்கனைகள் என மொத்தம் 117 வீரர்கள் தகுதி பெற்று உள்ளார்கள். இவர்கள் 16 விளையாட்டுகளில் பங்கேற்று இருக்கிறார்கள். இதுவரை நடைபெற்ற போட்டியில் 3 பதக்கங்கள் இந்தியா வென்றுள்ளது. இந்த நிலையில் இந்தியாவின் நம்பிக்கை தூணாக மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் உள்ளார். வினேஷ் போகத் மல்யுத்த பெண்கள் 50 Kg எடை பிரிவுக்கான அரை இறுதி சுற்று போட்டியில் கியூபா வீராங்கனை யூஸ்னிலிஸ் குஸ்மான் உடன் மோதி இருந்தார்.

samantha consoles vinesh phogat
samantha consoles vinesh phogat

இந்திய வீராங்கனை வினேஷ்:

இறுதியில் 5-0 என்ற புள்ளி கணக்கில் இவர் கியூபா வீராங்கனை யூஸ்னிலிஸ் குஸ்மானை வீழ்த்தி வெற்றி பெற்று வினேஷ் போகத் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருக்கிறார். இன்று இறுதிப்போட்டி நடைபெற்று இருக்கிறது. இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருந்தார். ஆனால், அதில் அவர் உடல் Weight அதிக காரணமாகப் பெண்களுக்கான 50 Kg மல்யுத்தப் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார். அவரது உடல் எடை 50 Kg க்கு மேல் சில கிராம் (100 கிராம்) கூடியதால் தான் இந்த தகுதி நீக்கம் பண்ணப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

தகுதி நீக்கம் செய்ய காரணம் :

இந்த தகவல் இந்திய ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது. ஏற்கனவே உடல் எடையைக் குறைப்பதற்கு வினேஷ் போகத், இரவு முழுவதும் தீவிர பயிற்சி யில் ஈடுபட்டு இருந்தார். இதனால் அவரின் உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டு ஹாஸ்ப்பிட்டலில் அனுமதிக்கப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், வினேஷ் போகத் இறுதி சுற்றில் தகுதி நீக்கம் பண்ணியதற்கு பிரபலங்கள் பலரும் இனையத்தில் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

சமந்தா பதிவு:

அந்த வகையில் நடிகை சமந்தாவும் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், சில நேரங்களில் மிகவும் உறுதித் தன்மை கொண்ட மனிதர்களுக்கே கடினமான பிரச்சனைகள் வரும். நீங்கள் தனியாள் இல்லை. உங்களுக்கும் மேல் ஒரு சக்தி அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறது. சிரமமான சமயங்களில் துணிச்சலாக நிற்கும் உங்களது திறன் போற்றத்தக்க ஒன்று. நாங்கள் எப்போதும் உங்களுடன் நிற்போம் என்று தெறிவித்திருக்கிறார்.

actress samantha consoles vinesh phogat
actress samantha consoles vinesh phogat

சமந்தா குறித்த தகவல்:

தென்னிந்திய சினிமாவில் பல வருட காலமாக மிக பிரபலமான நடிகைகளில் ஒருவராக சமந்தா விளங்கி வருகிறார். இவருடைய நடிப்பில் வெளியான பல படங்கள் மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் அண்மை காலமாகவே நடிகை சமந்தா அவர்கள் ஹீரோயினிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். தற்போது இவர் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என பல திரைப் படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

புதியது

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி போன்ற பல கட்டுரைகளை படிக்க vtamiltv.com வில் பாருங்கள்.

இப்போதே படிக்க