Home Stories Photos Videos Join
TRENDS
நடிகை கீர்த்தி பாண்டியனின் கிளாமர் ஸ்டில்ஸ்
ஸ்ரீலீலா அசத்தல் கிளிக்ஸ்
ஹைதராபாத் பெண் தொழிலதிபருடைய ரோல்ஸ்-ராய்ஸ் கார்!
வளர்ந்து வரும் கேரளா தொழிலதிபருடைய புது போர்ஷே கார்!
உலகின் பணக்கார பெண் ஃபிரான்ஷுவா பெட்டன் கோர்ட் னுடைய சொத்தின் மதிப்பு !

7 செப்டம்பர் 2025 இன்றைய ராசிபலன்: உங்கள் ராசிக்கான பலன்கள்!

இன்று செப்டம்பர் 7, 2025 உங்கள் ராசிக்கான இன்றைய பொதுவான பலன்களை இங்கே படித்து தெரிந்துகொள்ளுங்கள். Today Rasi Palan September 07 2025 Today Rasi…

இன்று செப்டம்பர் 7, 2025 உங்கள் ராசிக்கான இன்றைய பொதுவான பலன்களை இங்கே படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

Today Rasi Palan September 07 2025

Today Rasi Palan September 07 2025

மேஷ ராசி நேயர்களே!

உங்களுக்கு தன லாபம் அதிகரிக்கும். நண்பர்கள் வழியில் ஆதாயம் ஏற்படும். உயர் கல்விக்காக வெளிநாடுகளில் முயற்சி செய்பவருக்கும் வெளிநாட்டு வேலை முயற்சி செய்பவருக்கும் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தடைகள் நீங்கி வெற்றி பெறுவீர்கள். எடுக்கின்ற காரியங்கள் வெற்றி பெறும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் பற்றிய பேச்சு வார்த்தை இருக்கும். புதிய முடிவுகளை மேற்கொள்வீர்கள். புதிய பொருட்கள் வாங்குவீர்கள்.


ரிஷப ராசி நேயர்களே!

நீங்கள் நினைத்த காரியங்கள் வெற்றி அடையும். சொத்து விற்பனை பற்றிய முயற்சிகள் வெற்றியைத் தரும். குடும்பத்தில் பொருளாதார வரவு அதிகரிக்கும். புதிய முடிவுகள் எடுக்கும்போது கவனம் தேவை. குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். குழந்தைகளால் ஆதாயம் உண்டு. உறவினர்கள் நண்பர்கள் மூலம் புதிய வாய்ப்புகள் அமையும். சுப விரயங்கள் ஏற்படும்.


மிதுன ராசி நேயர்களே!

இன்று உங்களுக்கு மகிழ்ச்சிகரமான நாள். தூர பயணம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. கல்வியில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். நண்பர்கள் மூலம் உதவி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பொருளாதார வரவு சார்பாக இருக்கும். உங்கள் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். இதுவரை தடைபட்டிருந்த காரியங்கள் சிறப்பாக நடந்திடும்.


கடக ராசி நேயர்களே!

உங்கள் குடும்பத்திற்காக நேரம் ஒதுக்க வேண்டியது அவசியமாகும். பொருளாதார தேவை அதிகரிக்கும். வருமானத்திற்கான திட்டமிடல் மற்றும் முயற்சிகளில் அதிக கவனம் செலுத்துவீர்கள். தொழில் சம்பந்தப்பட்ட முடிவுகள் எடுக்கும்போது பெரியவர்கள் மற்றும் அனுபவம் வாய்ந்தவர்களின் ஆலோசனையை பின்பற்றவும். தேர்வுக்காக தயாராகி கொண்டிருக்கும் மாணவர்கள் கடின உழைப்பை செலுத்த வேண்டும். அன்றாட வேளையில் மட்டும் கவனம் செலுத்தவும்.


சிம்ம ராசி நேயர்களே!

குடும்பத்தில் மன மகிழ்ச்சி நிறைந்திருக்கும். பொருளாதார சேர்க்கை உண்டாகும். உங்கள் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். இருப்பினும் கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. சுப நிகழ்வுகள் பற்றிய பேச்சு வார்த்தை வெற்றியை தரும். குழந்தைகள் மீது அதிக அக்கறை காட்டுவீர்கள். உறவினர்களால் ஆதாயம் உண்டு. சிலருக்கு கண் சார்ந்த தொந்தரவுகள் ஏற்படலாம்.


கன்னி ராசி நேயர்களே!

சற்று வேலை சுமை அதிகரிக்கும். இருந்தாலும் கூட உங்கள் உழைப்புக்கேற்ற பலன் என்பது நிச்சயம் உண்டு. ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கூடுதல் கவனம் தேவை. சிறு மருத்துவ செலவு ஏற்பட வாய்ப்புள்ளது. முன்கோபத்தை தவிர்த்துக் கொள்வது நல்லது. மேலும் நட்பு வட்டாரத்தின் மூலம் எதிர்பார்த்த நன்மை உண்டாகும்.


இட்லி, தோசை சாப்பிட்டு போர் அடித்துவிட்டதா..? சுவையான கார பணியாரம் பண்ணி சாப்பிடுங்க..!


துலாம் ராசி நேயர்களே!

எடுக்கின்ற காரியங்களில் வெற்றி உண்டாகும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளை பெறுவீர்கள். தொலைதூரப் பிரயாணம் ஏற்படும். தெய்வ வழிபாடுகள் நன்மையை தரும், மற்றும் குலதெய்வ அனுகிரகம் உண்டு. பூர்வீக சொத்துகளால் லாபம் உண்டு. உறவினர்களின் ஆதரவு இருக்கும். திட்டமிட்ட செயல்பாடுகளில் மாறுதல் ஏற்படும். உறவினர்களின் ஆதரவு இருக்கும்.


விருச்சிக ராசி நேயர்களே!

உங்களுக்கு செலவுகள் அதிகரிக்கும் நாள். மனதில் குழப்பம் உண்டாகும். பண விஷயங்களில் சிக்கல் உண்டு. குடும்பத்தில் கருத்து வேறுபாடு ஏற்படும். தொழிலில் தடைகள் வரும். நண்பர்களின் உதவி குறையும். பிரார்த்தனை உங்களுக்கு நிம்மதி தரும். பொறுமை அவசியம்.


தனுசு ராசி நேயர்களே!

உங்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும் நாள். தொழிலில் முன்னேற்றம் உண்டு. பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தம்பதிகளுக்கு நல்லிணக்கம் உண்டு. பயண பலன் கிடைக்கும். புதிய தொடர்புகள் ஏற்படும். பாக்கியம் கூடும். வியாபாரம், தொழில் பற்றிய யோசனை இருக்கும். திடீர் அலைச்சல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.


மகர ராசி நேயர்களே!

உங்களுக்கு வேலைச்சுமை அதிகரிக்கும் நாள். மனதில் பதட்டம் உண்டாகும். தொழிலில் சிரமம் ஏற்படும். குடும்பத்தில் கருத்து வேறுபாடு உண்டாகலாம். பணவரவு தாமதமாகும். உடல்நலம் கவனிக்க வேண்டிய நாள். பிரார்த்தனை உங்களுக்கு நம்பிக்கை தரும். தொழிலில் முன்னேற்றம் உண்டு.


கும்ப ராசி நேயர்களே!

சந்திரன் உங்களின் ராசியில் இருப்பதால் இன்று உங்கள் தன்னம்பிக்கை உயரும். தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பணவரவு கூடும். பயணத்தினால் லாபம் உண்டு. நண்பர்களின் ஆதரவு உண்டு. சுபநிகழ்ச்சிக்கான பேச்சுவார்த்தைகள் வெற்றி அடையும். மாணவ மாணவியர் கல்விப் பணியில் ஆய்வுகளை மேற்கொள்வார்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.


மீன ராசி நேயர்களே!

இன்று உங்களுக்கு புதிய வாய்ப்புகள் உருவாகும். மாணவ மாணவியர்கள் கல்வியில் அதிக ஆர்வம் செலுத்துவார்கள். பண விஷயங்களில் முன்னேற்றம் உண்டு. தொழிலில் உங்கள் உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். குழந்தைகள் மீது பெற்றோருக்கு அன்பு அதிகரிக்கும். சுய சொத்துகள் வாங்குவதன் முயற்சியில் அனுகூலம் உண்டு. உற்றார், உறவினர்களிடையே மதிப்பு மரியாதை அதிகரிக்கும்.



For More Interesting Updates Check It VTamilNews


புதியது

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி போன்ற பல கட்டுரைகளை படிக்க vtamiltv.com வில் பாருங்கள்.

இப்போதே படிக்க

Related Latest News