தமிழ் திரையுலகில் இளைய தளபதி என அழைக்ககூடிய நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சி பெயருடன் தனது அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார்.
இதை தொடர்ந்து தனது கட்சியை விரிவு படுத்தவும், மக்களுக்கான சேவையை சிறப்பாக செய்வதற்காகவும் அடுத்தடுத்த அறிவிப்பினை வெளியிட்டு விறுவிறுப்பாக தனது அரசியல் வேலைகளை மேற்கொண்டிருக்கிறார்.

அதன்படி தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சியில் உறுப்பினராக சேர்வதற்கு செயலியொன்றை அறிமுகம் செய்திருந்தார். இதில் சுமார் 50 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் உறுப்பினர்களாக இணைந்துள்ளார்கள்.
இதையும் படிங்க : ஒன்று இணைந்த 2 லேடி சூப்பர் ஸ்டார் நடிகைகள்.. க்யூட் போட்டோக்கள்..!
Velmurugan directly attacked the TVK
இந்த நிலையில், கூத்தாடிகளை கொண்டாக்கூடிய நிலையை உடைக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார். அதன்படி அவர் பேசுகையில்,
நேற்று ஒரு கதாநாயகன் கட்சி துவங்கி உறுப்பினர்களை சேர்த்து வருகிறார், அந்த கட்சியின் பெயரும் எனக்கு தெரியாது.அந்த கட்சியில் 50 லட்சம் பேர் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளதாக ஊடகத்தில் தகவல் வெளியிடுகின்றனர்.
இதனால் Google பிளாக் ஆகிவிட்டதாக சொல்கிறார்கள். கூத்தாடிகளை கொண்டாடும் நிலையை உடைக்க வேண்டும். நான் பேசிவிட்டு போன பிறகு விஜய் ரசிகர்கள் என்னை கல்லால் அடிக்க வாய்ப்புண்டு, அவர்கள் அனைவரும் ரசிகர்கள் என கூறியிருக்கிறார் வேல்முருகன்.
இதையும் படிங்க : ட்ரௌட் மீன் என்றால் என்ன? அதில் உள்ள சத்துக்கள் மற்றும் பயன்கள்
உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி போன்ற பல கட்டுரைகளை படிக்க vtamiltv.com வில் பாருங்கள்.
இப்போதே படிக்க


