Pannerselvam R
தொடர்ந்து 4 ஆவது முறையாக உலகின் பணக்கார பெண்ணாக ஃபிரான்ஷுவா பெட்டன் கோர்ட்மேயர்ஸ்(franscois bettencourt) தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
இவர் பிரஞ்சு பியூட்டி நிறுவனமான எல் ஓரியால் (LO real SA) நிறுவனத்தினுடைய இணை உரிமையாளர் ஆவார். இவர் பியானோ இசைக்கலைஞர் மற்றும் எழுத்தாளர் ஆவார்.
70 வயதாகும் ஃபிரான்ஷுவா பெட்டன் கோர்ட்மேயர்ஸின் நிகர சொத்தின் மதிப்பு ரூ.83,000 கோடி
கடந்த வருடம் இவர் 100 பில்லியன் டாலர் சம்பாதித்த முதல் பெண்ணாக உருவெடுத்தார்.அதன் மூலம் புளூம்பெர்க் பில்லியனர் பட்டியலில் அவருக்கான உயர்ந்த இடத்தை தக்க வைத்தார்
எல் ஓரியாஸ் நிறுவனத்தில் மேயர்ஸ் ரூ.22321 கோடி மதிப்புள்ள அதிக பங்குகளை வைத்திருக்கிறார். அவரது கணவர் ஜான் பியரி மேயர்ஸ் அந்த நிறுவனத்தினுடைய சிஇஓவாக இருக்கிறார்.
ஃபிரான்ஷுவா மற்றும் அவருடைய குடும்பத்தினர் பொதுவில் வர்த்தகம் செய்யும் எல் ஓரியாஸ் நிறுவனத்தின் மூன்றில் ஒரு பங்கிற்கு மேல் வைத்துள்ளனர்.