HOME

STORIES

google-news

FOLLOW

JOIN

FOLLOW

ஆன்மீகம்

ஆனி மாதம் பிறந்த குழந்தைகளின் குணநலன், அதிர்ஷ்டம், தொழில் எப்படி இருக்கும் தெரியுமா?

A baby born in the month of Ani

ஆனி மாதத்தில் பிறந்தவர்களின் திறமை

தமிழ் மாதங்களில் 3 ஆவது வரக்கூடிய ஆனி மாதத்தில் சூரியன் மிதுன ராசியில் சஞ்சரிப்பார். இந்த மாதத்தில் பிறந்தவர்கள் மிகுந்த புத்திசாலியாக இருப்பார்கள். ஏனெனில் ஒருவருக்கு புத்திசாலித்தனம், நுண்ணிய அறிவு, கேள்வி ஞானம் தரக்கூடிய புதன் பகவானின் ராசியான மிதுனத்தில் ஆளுமை, ஆரோக்கியத்தை கொடுக்கக்கூடிய சூரிய பகவான் சஞ்சரிக்கின்றார். நுண்ணறிவோடு செயல்படக்கூடிய விஷயங்கள், வேலைகளில் சிறப்புடன் செயல்படுவார்கள்.

ஆனி மாதத்தில் பிறந்தவர்களின் சிறப்பான குணங்கள்

இவர்கள் அறிமுகமே இல்லாதவர்களிடம் கூட பல நாட்கள் பழகினவர் போல் நடந்து கொள்வார்கள்.மேலும் மிகவும் எதையும் சிறப்பாக சிந்திக்கக்கூடிய நபர்களாகவும், பொறுமைசாலியாகவும், நகைச்சுவை உணர்வு உள்ளவராக இருப்பார். இவர்களின் சிறப்பான சிந்தனையால் வாழ்க்கையில் எப்போதும் முன்னேறத்துடிக்கும் உத்வேகமும் கூடவே வரும்.

A baby born in the month of Ani
A baby born in the month of Ani

எந்த கனவுகள் வந்தால் ஆபத்து தெரியுமா?

குடும்பம் :

இவர்கள் தன் குடும்பத்தின் மீதும், மனைவி, குழந்தை மீது அளவிற்கு அதிகமாக பாசம் வைத்திருப்பார்கள். இவர்கள் தங்களின் இனிமையான பேச்சினால் மற்றவர்களை மயக்கி விடுவார்கள்.

ஆரோக்கியம்

இந்த மாதத்தில் பிறந்த பெண்கள் நீண்ட ஆயுள் பெற்றவர்களாக இருப்பார்கள். மேலும் இந்த மாதத்தில் அதிகம் பெண்கள் குழந்தைகள் பிறப்பதற்கான வாய்ப்புகள் தான் அதிகம் உண்டு.

வேலை :

இந்த மாதத்தில் பிறந்தவர்கள் எந்த விஷயமாக இருந்தாலும் அதை தைரியத்துடன் செய்யலாம் என களம் இறங்கக்கூடியவர்கள். இவர்கள் ஒரே கல்லில் 2 மாங்காய் வீழ்த்தக்கூடிய அளவு புத்திக் கூர்மையோடு செயல்படக்கூடியவர்கள். அதே சமயம் தங்கள் மீது பெரிய பொறுப்புகளை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

செல்வம் :

இந்த மாதத்தில் பிறந்தவர்கள் பிறக்கும் போதே நல்ல வசதியுடன், செல்வந்தராக இருப்பார். பெரும்பாலும் தொழிலதிபர் குடும்பம், வசதி அதிகம் உள்ளவர்கள் என்று கூட கூறலாம். இவர்கள் பெரிய தொழிலதிபர் ஆக வேண்டும் என விரும்புவார்கள் ஆனால் சிறு சிறு தொழில்களை செய்ய தயங்குவார்கள்.

ஆனி மாதத்தில் பிறந்தவர்களின் குறைகள் :

ஞாபகசக்தி சிறப்பாக இருக்கும் இவர்கள், தங்களின் முடிவுகளை அடிக்கடி மாற்றிக் கொண்டே போவார்கள். சந்தேக குணம் கொண்டிருப்பதால், ஒரு நிலைப்பாட்டில் இருக்காமல், சூழ்நிலைக்கு தகுந்தவாறு இவர்களின் முடிவும் மாறிக் கொண்டே இருக்கக்கூடும்.

இவர்களிடம் கொள்கை என ஒன்றும் இருக்காது. மேலும் மற்றவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் தன்னுடைய மன ஓட்டத்தையோ, கருத்துக்களோ வெளிப்படுத்தாமல் வைத்திருப்பார்கள்.

சிறப்பாக சிந்திக்கக்கூடியவர்கள் என்றாலும் வாழ்வில் சிறிய கஷ்டம் வந்தாலும் மனம் துவண்டு விட வாய்ப்புள்ளது. இவர்கள் கஷ்டத்தை தாங்கிக் கொள்ள முடியாதவர்களாக இருப்பார்கள்.

செய்ய வேண்டியது :

இவர்கள் ஒரு வேலையை செய்து கொண்டுள்ள போதே அதை, அப்படியே விட்டுவிட்டு, அடுத்த வேலை செய்ய சென்று விடுவார்கள். அப்படி இல்லையென்றால் ஒரு வேலையாவது திருந்த செய்வது நல்லது.

இவர்கள் கல்வி, வேலை மற்றும் தொழில் காரணங்களுக்காக வெளியூர் பயணம் அல்லது வெளியூரிலேயே தங்கும் சூழ்நிலை இருக்கும். வீட்டில் உள்ளவர்களை பிரியக்கூடிய சூழல் இருக்கும்.

இவர்கள் கஷ்டத்தை தாங்கிக் கொள்ள முடியாத நபர்களாக இருப்பார்கள். இவர்களின் முன்னேற்றத்திற்கு மூலதனமே இவர்களின் மூளையே.

மேலும் சுவாரஸ்யமான செய்திகளுக்கு வி தமிழ் நியூஸ் வாட்ஸ்அப் whatsapp சேனலை கிளிக் செய்து பின்தொடரவும்