HOME

STORIES

google-news

FOLLOW

JOIN

FOLLOW

வணக்கம் நண்பர்களே.! இன்றைய பதிவில் சங்கு பூவினால் உண்டாகும் நன்மைகள் பற்றி தெரிந்துகொள்வோம். இது என்ன சங்கு பூ என்று யோசனை செய்றீங்களா.! சங்கு பூ என்றால் வேறொன்றுமில்லை. சங்கு பூவின் மற்ற பெயர்களை சொன்னால் எளிதாக உங்களுக்கு தெரியும். அது சங்கு புஷ்பம், மாமூலி, கன்னி கொடி, காக்கணம், காக்கரட்டான் ஆகிய பெயர்களில் அழைப்போம். இந்த பெயரிலே காக்கரட்டான் என்பது தான் எல்லோரும் அறிந்தது. கிராமத்திலே காக்கரட்டான் பூ என்று சொன்னால் தான் தெரியும்.

Sangu Poo Benefits in Tamil
Sangu Poo Benefits in Tamil

Sangu Poo Benefits in Tamil

இந்த சங்கு பூ நிலங்களில் மற்றும் சாலை ஓரங்களில் இருக்கும். இந்த பூவை யாரும் வீட்டில் வளர்க்கிறீங்களா.! நாம் இந்த பூவெல்லாம் வளர்க்க மாட்டோம். தலையில் வைத்து கொள்ளும் பூவை மட்டும் தான் வளர்ப்போம் அல்லவா. ஆனால் சங்கு பூவையும் வீட்டில் வளர்க்கலாம் என்பது எத்தனை பேர்கள் அறிந்தது. இதை கடவுளுக்கு சாற்றுவோம். இந்த பூவினால் வேறன்ன பயன்கள் இருக்கு என்று தானே நினைக்கிறீர்கள். இந்த பதிவிற்கு பிறகாவது அறிந்துகொள்ளுங்கள். வாங்க சங்கு பூவினால் கிடைக்கும் பயன்களை பற்றி பார்ப்போம்.

சங்கு பூ வகைகள் | Sangu Poo Vagaigal in Tamil

ஒவ்வொரு பூவும் தனித்தனி மணம் கொண்டது. அதுமட்டுமின்றி வெவ்வேறு வண்ணத்தில் ஒரே பூ இருக்கும். எடுத்துக்காட்டாக அந்தி மந்தாரை பூவில் வெள்ளை, ரோஸ் போன்ற வண்ணத்தில் இருக்கும். அது போல தான் சங்கு பூவும் இரண்டு வண்ணத்தை கொண்டது.

  • ஊதா நிற பூ
  • வெள்ளை நிற பூ

சங்கு பூ கொடியாக வளர கூடியது. நீங்கள் கொஞ்சம் வைத்தாலே அது படர்ந்துவிடும். இதில் ஊதா நிற பூவை வீட்டில் வளர்ப்பதால் உண்டாகும் நன்மைகளை பற்றி பார்ப்போம்.

நினைத்த காரியம் வெற்றி பெற:

வீட்டின் வாசலில் சங்கு பூவை வைக்க வேண்டும். நீங்கள் வெளியில் போகும் போது இறைவனை வணங்கி விட்டு செல்லுவோம். அது போல சங்கு பூவை பார்த்து பின் சென்றாலே போதும் நீங்கள் நினைத்த காரியம் ஜெயமாகும்.

கோபம் குறைய:

பொதுவாக பச்சை நிறம் மன அமைதியை தரும் என்பது எல்லோரும் அறிந்தது. அதே போல தான் இந்த ஊதா நிற சங்கு பூவை பார்த்தாலும் மன அமைதியை ஏற்படுத்தும். அதுமட்டுமில்லாமல் நீங்கள் வீட்டில் எதாவது பிரச்சனை அல்லது சண்டை என்றால் கோபம் அல்லது மன குழப்பம் அடைவீர்கள். அந்த நிலையில் சங்கு பூவை கண்டால் போதும் மன அமைதி உண்டாகி கோபம் குறைந்துவிடும்.

சங்கு பூ எந்த கடவுளுக்கு உகந்தது:

ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு பூவை வைத்து வணங்குவோம். கடவுளுக்கு உகந்த பூவை வழிபடுவது சிறந்தது என்றும் கூறுவார்கள். அந்த வகையில் சிவனுக்கு சங்கு பூ உகந்தது. சங்கு பூவை சிவனுக்கு வைத்து வழிபடுவதால் கேட்கும் வரம் கிடைக்கும்.

மருத்துவ பயன்கள்:

இந்த சங்கு பூவுக்கு அதிகப்படியான மருத்துவ குணம் கொண்டது. சங்கு செடியில் இருக்கும் காற்றை சுவாசித்தால் மூச்சு திணறல், சுவாச கோளாறு, இருதயம் தொடர்பான பிரச்சனைகளும் தீரும். சங்கு பூ கொடி இருக்கும் இடத்தில் சூட்டை தனித்து குளிர்ச்சியான நிலையில் வைத்திருக்கும்.

சங்கு பூவினால் உண்டாகும் நன்மைகளை படித்து தெரிந்து கொண்டீர்களா.! அடுத்து என்ன பண்ணப்போகிறீர்கள். வீட்டின் முன் பகுதியில் சங்கு பூவை வைக்க போகிறீர்கள் தானே. இந்த பதிவை படித்ததன் மூலம் சங்கு பூவை வைக்காமல் இருப்பீர்களா.! சங்கு பூவை வைத்து நன்மைகளை பெற்று வெற்றி காணுங்கள்.

மேலும் சுவாரஸ்யமான செய்திகளுக்கு வி தமிழ் நியூஸ் வாட்ஸ்அப் whatsapp சேனலை கிளிக் செய்து பின்தொடரவும்

Related Latest News