HOME

STORIES

google-news

FOLLOW

JOIN

FOLLOW

பொழுதுபோக்கு

நடிப்பதற்கு தடை போட்டாரா சிவகுமார்? மும்பையில் குடிபோக காரணம் என்ன ? ஜோதிகா பளிச் பேட்டி !

Jyothika

ஜோதிகா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையை வலம் வந்தவர். அவர் நடிகர் சூர்யாவை திருமணம் செய்துகொண்டார். திருமண வாழ்கையில் வந்த பிறகு நடிப்புக்கு பெரிய பிரேக் போட்டார்.

சிவகுமார் ஜோதிகாவை நடிக்கக்கூடாது என்று சொன்னதாகவும் அதனால்தான், ஜோதிகாவும் சூர்யாவும் மும்பைக்கு குடியேறக் காரணம் சிவகுமார்தான் என்றும் ஏகப்பட்ட வதந்திகள் வெளியாகின.

இந்த நிலையில், ஜோதிகாவே சரியான விளக்கத்தை கொடுத்துள்ளார். ஜோதிகாவிடம் கோபிநாத் எடுத்த பேட்டியில் வெளிப்படையாக பேசியுள்ளார்.

சினிமாவில் நடிக்கவந்த 15 வயது ஜோதிகாவிற்கும் இப்போதுள்ள ஜோதிகாவிற்கும் நிறைய மாற்றம் இருக்கு, 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட 5 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட போன ஆண்டு இருந்ததை விட இந்த ஆண்டு ரொம்பவே மாறிவிட்டேன் என்று கூறினார்.

Jyothika
Jyothika | Jyothika about Sivakumar

எஸ் ஜெ சூர்யா வாலி படத்தில் சிம்ரன் ரோலில் நடிக்க முதலில் என்னைத்தான் அணுகினார்.ஆனால், இந்தி படத்தில் கமிட்டான நிலையில் முடியாது என சொல்லிவிட்டேன். அதன் பின்பு மீண்டும் ஒரு சின்ன ரோல் இருக்கு வரிங்களா என்று கேட்டார், அதற்கு சம்மதம் தெரிவித்து அந்த ரோலில் நடித்தேன் என்றார்.

Jyothika about Sivakumar

உங்கள் மாமா சிவகுமார் உங்களை சினிமாவில் நடிக்க கூடாது என்று தாடுத்தாரா என்று நாசுக்காக கோபிநாத் கேட்க, இந்த விஷயத்தை நான் க்ளியர் பண்ணியே ஆகணும் என கேள்விக்கு மறுப்பு தெரிவிக்காமல் பதிலளித்த ஜோதிகா அந்த வீட்டில் தனக்கு ரொம்ப சப்போர்ட்டாக இருந்ததே என் அப்பா சிவகுமார்தான் என பதில் அளித்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ஷூட்டிங் நடக்கும் போது குடும்பம்,குழைந்தைகள் எல்லாம் மறந்துவிட்டு வேலை செய்யும் இடத்தில மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்றும் மம்முட்டியுடன் நடித்த காதல் பிரத்தியேகமாக தனது நண்பர்களுக்கு போட்டுக்காட்டி அதை ரசித்து பார்த்து பாராட்டினார்.

திருமணத்திற்கு பிறகு 15 வருடங்கள் சென்னையில் தான் இருந்தேன். திருமணத்திற்கு பிறகு பிறந்த பெண்கள் பிறந்த வீட்டை மறந்து விட வேண்டும் என்ற எழுதப்படாத சட்டம் இங்கே இருக்கிறது. என் பெற்றோர்கள் கோவிட் நேரத்தில் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அடிக்கடி விமானத்தின் மூலம் மும்பைக்கு செல்ல முடியவில்லை.

அதனால், சூர்யாவிடம் சொன்னதும் அவரும் சரியென்று சொல்லி மும்பைக்கு குடியேற சம்மதித்தார் என்றார் ஜோதிகா. வீட்டில் அதற்காக எந்த பிரச்சனையும் நடக்கவில்லை எனவும் பண்டிகை நாட்கள் வந்தால் ஒன்றாக கூடி மகிழ்ச்சியாக கொண்டாடி வருகிறோம் என்று ஹேட்டர்களுக்கு பதிலடி கொடுத்தார். மேலும், இது தற்காலிகமானது மீண்டும் சென்னைக்கு வந்து விடுவேன் என்றும் ஜோதிகா கூறியுள்ளார்.

மேலும் சுவாரஸ்யமான செய்திகளுக்கு வி தமிழ் நியூஸ் வாட்ஸ்அப் whatsapp சேனலை கிளிக் செய்து பின்தொடரவும்