HOME

STORIES

google-news

FOLLOW

JOIN

FOLLOW

செய்தி

மயிலாடுதுறையில் புத்தாண்டை முன்னிட்டு ஸ்ரீமாயூரநாதர் கோயிலில் பக்தர்கள் சாமி தரிசனம்.

Sri Mayuranath Temple New Year 2024

Sri Mayuranath Temple New Year 2024 : மயிலாடுதுறையில் புத்தாண்டை முன்னிட்டு ஸ்ரீமாயூரநாதர் கோயிலில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்றவாறு சாமி தரிசனம். ஆதிமயூரநாதருக்கு சிறப்பு அபிஷகம் செய்யப்பட்டு சங்காபிழேகம், ருத்ரஹோமம், மகாதீபாரதனை நடைபெற்றது.

Sri Mayuranath Temple New Year 2024

Sri Mayuranath Temple
Sri Mayuranath Temple

மயிலாடுதுறையில் 1500 வருடங்கள் பழமையுள்ள மாயூரநாதர் ஆலயம் இருக்கிறது. இங்கு அபயாம்பிகை அம்மன் மயில் உருவில் சிவனை பூஜித்து மயில் உருவம் நீங்கி சாபவிமோசனம் அடைந்த இடம். சமயக்குறவர்களால் பாடல்கள் பாடப்பட்ட இத்திருத்தலத்தில் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ஸ்ரீஅபயாம்பிகை சமேத மாயூரநாதருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகாதீபாரதனை நடைபெற்றது.

Read Also : அனிமல் பட கதாநாயகி ராஷ்மிகா மந்தனாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா..?

திரளான பக்தர்கள் வாழ்வு செழிக்கவும், 2024 ஆம் ஆண்டு நோய்கள் இல்லாமல் வாழவும் நீண்ட வரிசையில் நின்றிருந்து.ஸ்ரீமாயூரநாதர், ஸ்ரீசுப்ரமணியசுவாமி, ஸ்ரீதுர்கையம்மன், நவகிரகங்களை சுற்றி ஸ்ரீஅபாயம்பிகை அம்மனை தரிசித்து வருகிறார்கள். தொடர்ந்து அதிமாயூரநாதர் ஆலயத்தில் புத்தாண்டு தினம் மற்றும் குதம்பை சித்தர் உழவாரப்பணி மன்றத்தின் 24 ஆம் வருட துவக்கவிழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.

Read Also : கமல்ஹாசன் நடித்ததில் சிறந்த ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படங்கள்!

ருத்ரஹோமம்,செய்து ஸ்ரீஆதிமாயூரநாதருக்கு பால், பழம்,தேன்,நெய் மற்றும் சந்தனம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. பின்னர் மகா பூர்ணாகுதி, மஹாசங்காபிஷேகம் மற்றும் 108 சங்காபிஷேகம் நடைபெற்று மகா தீபாரதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் சுவாரஸ்யமான செய்திகளுக்கு வி தமிழ் நியூஸ் வாட்ஸ்அப் whatsapp சேனலை கிளிக் செய்து பின்தொடரவும்