HOME

STORIES

google-news

FOLLOW

JOIN

FOLLOW

செய்தி

மயிலாடுதுறையில் 2 கோடி மதிப்பில் நூலகம் மற்றும் அறிவு சார் மையத்தை முதல்வர் திறந்து வைத்தார்.

luibr

2 crore library in Mayiladuthurai : மயிலாடுதுறையில் 2 கோடி மதிப்பில் நூலகம் மற்றும் அறிவு சார் மையத்தை முதல்வர் காணொளி காட்சிவாயிலாக திறந்து வைத்தார். திரளான மாணவர்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர் :-

2 crore library in Mayiladuthurai
2 crore library in Mayiladuthurai

மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை கல்லூரி எதிரில் மாணவர்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதிய நூலகம் மற்றும் அறிவு சார் மையம் கட்டப்பட்டிருக்கிறது. சுமார் ரூ. 2 கோடி மதிப்பீட்டில் சோலார் வசதியோடு கட்டப்பட்டுள்ள இந்த நூலகத்தை சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலமாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று திறந்து வைத்தார். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி மற்றும் எம்எல்ஏ ராஜ்குமார் போன்றவர்கள் குத்துவிளக்கேற்றி பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் பயன்பாட்டிற்காக துவக்கி வைத்தார்.

மேலும் நவீன வசதிகளுடன் கம்ப்யூட்டர் மற்றும் இருக்கைகள் பல்வேறு புத்தகங்கள் கொண்ட இந்நூலக மையத்தை கல்லூரி மாணவிகள் முதல் முதியவர்கள் வரை நேரடியாக சென்று பார்வையிட்டார்கள். அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி மாணவர்களிடம் நூலக மையத்தின் வசதிகள் பற்றி கேட்டறிந்தார்.

Read More : மயிலாடுதுறையில் பாலியல் வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி

மேலும் சுவாரஸ்யமான செய்திகளுக்கு வி தமிழ் நியூஸ் வாட்ஸ்அப் whatsapp சேனலை கிளிக் செய்து பின்தொடரவும்