HOME

STORIES

google-news

FOLLOW

JOIN

FOLLOW

செய்தி

மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர் மழையின் காரணமாக ஏற்பட்ட பயிர் சேதங்களை அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு

Meyyanathan examined the crop damage

Meyyanathan examined the crop damage : மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர் மழையின் காரணமாக ஏற்பட்ட பயிர் சேதங்களை அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு; தண்ணீரில் மூழ்கி முளைக்கத் ஆரம்பித்த பயிர்களை அமைச்சரிடம் காட்டி விவசாயிகள் வேதனை;-

Meyyanathan examined the crop damage
Meyyanathan examined the crop damage

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த சனி ஞாயிறு மற்றும் திங்கள் கிழமைகளில் தொடர்ந்து மழை பெய்தது. இதனால் மாவட்டம் முழுவதும் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர்கள் மற்றும் இளம் பயிர்கள் சுமார் 35,000 ஏக்கர் விளை நிலத்தில் மழை நீர் சூழ்ந்துள்ளது.

கடந்த நான்கு நாட்களாக மழை நீரில் மூழ்கி கிடக்கிற நெற்பயிர்கள் தற்போது முளைக்க ஆரம்பித்துள்ளது. மயிலாடுதுறை வட்டாரத்தில் மட்டும் சுமார் 12,000 ஏக்கர் நெற்பயிர்கள் பாதிப்புக்கு ஆளாகியுள்ளன. இந்நிலையில் மயிலாடுதுறையை அடுத்த சோழம்பேட்டை கிராமத்தில் தமிழக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் 10/01/2024 நேரடியாக வந்து ஆய்வு மேற்கொண்டார்.

Read Also : குளம் இதை வேறு எப்படி எல்லாம் சொல்வார்கள் உங்களுக்கு தெரியுமா?

அப்போது, நான்கு தினங்களாக தண்ணீரில் மூழ்கி முளைக்க தொடங்கியுள்ள நெற்பயிர்களை விவசாயிகள் அமைச்சரிடம் காண்பித்து தங்கள் வேதனையை வெளிப்படுத்தினர். இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, எம் பி ராமலிங்கம், எம்எல்ஏக்கள் நிவேதா முருகன், பன்னீர்செல்வம் மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

மேலும் சுவாரஸ்யமான செய்திகளுக்கு வி தமிழ் நியூஸ் வாட்ஸ்அப் whatsapp சேனலை கிளிக் செய்து பின்தொடரவும்