HOME

STORIES

google-news

FOLLOW

JOIN

FOLLOW

Education awareness rally : நாகையில் நடைபெற்ற மாபெரும் கல்வி விழிப்புணர்வு பேரணியில் பள்ளி மாணவ மாணவிகள் 300 க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்பு; பொது மக்கள் கற்றலை ஊக்குவிக்கும் வகையில் கல்வி உபகரணப் பொருட்களை வழங்கி உற்சாகப்படுத்தினார்கள்.

Education awareness rally
Education awareness rally

நாகை அருகே உள்ள மஞ்சக்கொல்லை மற்றும் அந்தணப்பேட்டை முஸ்லிம் ஜமாத் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கல்வி விழிப்புணர்வு பேரணி நடத்து கொண்டிருக்கிறது. அதன்படி இந்த ஆண்டு பேரணி சிலம்பாட்டத்துடன் வெகு விமர்சையாக நடைபெற்றது. பள்ளிவாசலில் துவங்கிய இந்த பேரணியானது மஸ்தான் வீதி,பள்ளி வாசல் தெரு ரைஸ்மில்,சிவன் மேல் வீதி வழியாக சுமார் 2 கிலோ மீட்டர் ‌தூரம் வரை சென்றது. இந்தப் பேரணியில் பள்ளி மாணவ மாணவிகள் 300க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு, கல்வி கற்பதன் அவசியம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

Read Also : தரங்கம்பாடி அருகே எல்கை பந்தயம்

குறிப்பாக மாணவர்கள் பள்ளி பருவத்தில் இடைநிற்றலை தவிர்க்கும் நோக்கில் நடைபெற்ற இந்தப் பேரணியில் திரளான பொதுமக்கள் மாணவர்களுக்கு தங்களால் இயன்ற பேனா நோட்டு, பரிசு பொருட்கள் கொடுத்தார்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல துணை செயலாளர் நாகை சாதிக் ஸ்நாக்ஸ் பாக்ஸ் போன்ற கல்வி உபகரண பொருட்களை வழங்கி ஊக்கப்படுத்தினார்.

மேலும் சுவாரஸ்யமான செய்திகளுக்கு வி தமிழ் நியூஸ் வாட்ஸ்அப் whatsapp சேனலை கிளிக் செய்து பின்தொடரவும்