HOME

STORIES

google-news

FOLLOW

JOIN

FOLLOW

பொழுதுபோக்கு

Top 3 Overtake Villains : 2023-ல் ஹீரோக்களை ஓவர்டேக் செய்த டாப் 3 வில்லன்கள்!.. கெத்தாக பஹத் பாசில்…

Top 3 Overtake Villains

Top 3 Overtake Villains : சினிமாவில் ஹீரோவை நல்லவனாக காட்ட வேண்டுமென்றால் ஒரு கதாபாத்திரத்தை வில்லனாக, அதாவது கெட்டவனாக காட்டுவார்கள். வில்லன் இல்லாமல் கதையில் ஹீரோ மாஸ் காட்ட முடியாது. அதனாலே ரஜினி, விஜய், அஜித் போன்ற பெரிய நடிகர்களின் படங்களில் வில்லன் கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

Top 3 Overtake Villains
Top 3 Overtake Villains

வில்லன் கதாபாத்திரத்தை அழுத்தமாக காட்டினால் தான் அவனை ஹீரோ எப்படி சமாளிப்பார் என ரசிகர்களுக்கு ஒரு எதிர்பார்ப்பு ஏற்படும். வில்லன் கதாபாத்திரம் மொக்கையாக இருந்தால் ஹீரோ என்ன செய்தாலும் அது வேலைக்கு ஆகாது. நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான பீஸ்ட் படத்திலும் கூட இதுதான் நடந்தது.

அந்த காலத்தில் எம்.என்.நம்பியார், எம்.ஆர்.ராதா, அசோகர், பி.எஸ்.வீரப்பா உள்ளிட்ட வில்லன் நடிகர்கள் இருந்தார்கள். அதன் பிறகு சத்தியராஜ், ஆனந்தராஜ், மன்சூர் அலிகான் என்ற சில நடிகர்கள் வந்தார்கள். அவர்களுக்கு பின் ஆந்திரா, கேரளா, மும்பை போன்ற மாநிலங்களிலிருந்து வில்லன் நடிகர்கள் கோலிவுட்டில் களம் இறக்கப்பட்டார்கள்.

Top 3 Overtake Villains

அந்தவகையில் 2023 ம் ஆண்டு ஹீரோக்களையே ஓவர்டேக் செய்த டாப் 3 வில்லன் நடிகர்களை பற்றித்தான் இங்கே பார்க்க உள்ளோம். முதலாவது இடம் பிடித்தவர் பஹத் பாசில். மாமன்னன் படத்தில் இவர் காட்டிய நடிப்பை ரசிகர்கள் அவ்வளவு சீக்கிரம் மறக்கமாட்டார்கள். இந்த படத்தில் பஹத்பாசில் சம்பந்தமான வீடியோக்கள் சமூகவலைத்தளத்தில் வைரலானது. இதைப்பார்த்த அனைவரும் அவர்தான் அந்த படத்தின் ஹீரோ என நினைத்தனர்.

Read Also : நாகப்பட்டினம் மாவட்டம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆட்சியர் திடீர் ஆய்வு

ஜெயிலர் படத்தில் ரஜினியிடம் வில்லத்தனம் காட்டிய வினாயகன், இரண்டாவது இடம் பிடித்திருக்கிறார். மலையாளத்தில் பல படங்களில் கலக்கியிருந்த வினாயகன் ஜெயிலரில் வில்லத்தனம் காட்டி அசத்தியிருந்தார். பாட்ஷா படத்தில் ரகுவரனுக்கு பின் வினாயகன் நடித்த ஜெயிலர் படத்தின் வில்லன் வேடம் அதிகம் பேசப்பட்டது.

மார்க் ஆண்டனி படத்தில் வில்லனாக அசத்திய எஸ்.ஜே.சூர்யா 3 வது இடத்தில் இருக்கிறார். இந்த படத்தில் விஷால் ஹீரோவா அல்லது இவர் ஹீரோவா என கணிக்கவே முடியாது. படம் உருவான போது ஹீரோ விஷால்தான் என்றாலும் படம் வெளிவந்த பின் அப்படத்தின் ஹீரோவாக மாறும் அளவுக்கு இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்து அசத்தியிருப்பார்.

மேலும் சுவாரஸ்யமான செய்திகளுக்கு வி தமிழ் நியூஸ் வாட்ஸ்அப் whatsapp சேனலை கிளிக் செய்து பின்தொடரவும்