HOME

STORIES

google-news

FOLLOW

JOIN

FOLLOW

செய்தி

நாகையில் முதல்வரின் பிறந்த தினத்தை முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கு அசைவ உணவு

nagaia

Non-veg food for sanitation workers : நாகையில் முதல்வரின் பிறந்த தினத்தை முன்னிட்டு கீழ்வேளூர் பேரூராட்சி சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு அசைவ உணவு

Non-veg food for sanitation workers
Non-veg food for sanitation workers

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் பேருராட்சியின் சார்பில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு கீழ்வேளூர் பேரூராட்சி மன்ற தலைவர் இந்திராகாந்தி சேகர் தலைமையில் கீழ்வேளூர் பேரூராட்சியில் பணிசெய்யும் தூய்மை காவலர்களுக்கு மதியம் அசைவ உணவு வழங்கப்பட்டது. இதில் பேரூராட்சி துணைத் தலைவர் சந்திரசேகரன், பேரூர் கழக நகர துணை செயலாளர் சேகர் மற்றும் பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் பங்கேற்று கொண்டனர்.

இதையும் படிங்க : கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதி ஆலோசனைக் கூட்டத்தில் திமுகவினர் பெருமிதம்

தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் பதவியேற்ற கொரோனா காலத்தில் தூய்மை காவலர்கள் உறுதுணையாக இருந்ததர்க்காகவும் கீழ்வேளூர் பேரூராட்சி தென்னிந்தியாவிலே தூய்மை நகரம் விருதினை பெற்று கொடுத்த தூய்மை காவலர்களை கௌரவிக்கும் விதமாக முதலமைச்சரின் பிறந்த தினத்தை முன்னிட்டு அவர்களை பாராட்டி அசையும் உணவு வழங்கப்பட்டது.

இதையும் படிங்க : கார்ன் ஃப்ரை செய்வது எப்படி..?

மேலும் சுவாரஸ்யமான செய்திகளுக்கு வி தமிழ் நியூஸ் வாட்ஸ்அப் whatsapp சேனலை கிளிக் செய்து பின்தொடரவும்