HOME

STORIES

google-news

FOLLOW

JOIN

FOLLOW

செய்தி

மயிலாடுதுறையில் தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி மற்றும் திட்டவிளக்க கண்காட்சி

TN Govt Achievement Photo Exhibition

தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி மற்றும் திட்டவிளக்க கண்காட்சியை மயிலாடுதுறையில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் மயிலாடுதுறை எம்பி, எம்எல்ஏ, மாவட்ட வருவாய் அலுவலர் ;தொடங்கி வைத்து பார்வையிட்டனர்:-

TN Govt Achievement Photo Exhibition
TN Govt Achievement Photo Exhibition

மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட புளியந்தெருவில் இருக்கும் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி மற்றும் திட்ட விளக்க கண்காட்சியை செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் மயிலாடுதுறை எம்பி இராமலிங்கம, பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன், மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை துவங்கி வைத்து பார்வையிட்டனர். இப்புகைப்பட கண்காட்சியில் தமிழ்நாடு முதலமைச்சரால் தொடங்கி வைத்த புதிய திட்டங்கள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் கொடுத்தது பற்றிய போட்டோக்கள் காட்சிபடுத்தப்பட்டிருந்தது.

இதையும் படிங்க : மாலை நேர ஸ்நாக்ஸ் சுவையான கொண்டை கடலை கட்லெட் இதை செய்து பாருங்களேன்!!!

TN Govt Achievement Photo Exhibition

மேலும் தமிழ்நாடு அரசின் பல்வேறு சிறப்பு திட்டங்களான மக்களைத் தேடிமருத்துவம், ஒரு இலட்சம் மின் இணைப்பு வழங்கும் திட்டம், கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவமுகாம், இன்னுயிர் காப்போம் திட்டம், இல்லம் தேடிக் கல்வி, பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்கள் மற்றும் இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டம், முதலமைச்சரின் ஊட்டம் தரும் காய்கறித்தோட்டம் மற்றும் மாடித் தோட்டம் அமைக்க காய்கறி விதைகள் வழங்குதல், ஆகிய பல்வேறு திட்டங்கள் பற்றிய நிகழ்ச்சிகள், புகைப்படங்கள், சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துத்துறை அமைச்சர் மற்றும் பிறதுறை அமைச்சர் பெருமக்கள் பங்கேற்ற நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நலத்திட்டஉதவிகள் வழங்கிய புகைப்படங்கள் ஆகிய 100க்கும் அதிகமான புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தது.

மேலும் சமூக நலத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, கூட்டுறவுத்துறை போன்ற பல்வேறு துறைசார்ந்த மக்கள் நலத்திட்டங்கள் சம்பந்தமான கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது. இப்புகைப்படக் கண்காட்சியை திரளான பொதுமக்கள் பார்வையிட்டனர். இந்த விழாவில் மயிலாடுதுறை நகர் மன்ற தலைவர் செல்வராஜ், மயிலாடுதுறை ஒன்றியக்குழு தலைவர் காமாட்சி மூர்த்தி மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

இதையும் படிங்க : விநாயகருக்கு எந்தெந்த பிராத்தனைக்கு எத்தனை தேங்காய் உடைக்க வேண்டும்..

மேலும் சுவாரஸ்யமான செய்திகளுக்கு வி தமிழ் நியூஸ் வாட்ஸ்அப் whatsapp சேனலை கிளிக் செய்து பின்தொடரவும்