HOME

STORIES

google-news

FOLLOW

JOIN

FOLLOW

செய்தி

தமிழில் பெயர் பலகைகள் அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் அமைச்சர் மு.பெ. சாமிநாதன்

Action to erect name boards in Tamil

Action to erect name boards in Tamil : தமிழில் பெயர் பலகைகள் அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தமிழக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் பேட்டி…

Action to erect name boards in Tamil
Action to erect name boards in Tamil

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை ஆரோக்கியநாதபுரத்தில் ரூபாய் மூன்று கோடி மதிப்பீட்டில் மாயூரம் வேதநாயகம் பிள்ளை அரங்க கட்டிடம் அமைக்கும் பணியை தமிழக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு.பே. சாமிநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்..

Action to erect name boards in Tamil

அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது கவிஞர் வேதநாயகம் பிள்ளைக்கு சிலை மற்றும் அரங்கம் அமைக்கப்படும் என்றும் தமிழக முதல்வர் அறிவித்ததை அடுத்து செய்தி துறை சார்பில் மூன்று கோடி அரங்கம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டு நடந்து வருகிறது தமிழகத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் தமிழ் மொழி தியாகிகள் மக்களுக்காக உழைத்த தலைவர்களின் சிலைகள் ஆகியவை அமைக்கப்பட்டு வருவதாகவும் சீர்காழி தமிழிசை மூவர் மணிமண்டபம் பராமரிப்பு பணி மற்றும் மாயூரம் வேதநாயகம் பிள்ளை நினைவு அரங்கம் கட்டுமான பணிகளை ஆய்வு செய்ததாகவும் பொதுப்பணித்துறை மூலம் நடைபெறும் பணியில் மக்கள் பயன்பாட்டிற்கு உதவும் வகையில் ஒரு சில மாற்றம் செய்யலாமா என்று ஆலோசித்து வருவதாகவும் கூறினார்.

Read Also : மயிலாடுதுறை மயூரநாதர் ஆலயத்தின் குமரன் கோவிலில் தைப்பூச திருவிழா

மக்கள் பயன்பாடு மற்றும் அரசு நிகழ்ச்சிகள் நடத்தும் வகையில் இந்த அரங்கை பயன்படுத்தும் நோக்கில் அமைக்கப்பட்டு வருவதாகவும் வணிக நிறுவனங்களில் பெயர் பலகை தமிழில் கட்டாயம் இருக்க வேண்டும் என்ற சட்டம் இருக்கிறது வருகின்ற இரண்டாம் தேதி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த இருப்பதாகவும் கூறினார் தொடர்ந்து பிப்ரவரி முதல் வாரத்தில் தமிழ் வளர்ச்சித் துறை தொழிலாளர் துறை சார்பில் ஆய்வு செய்து தமிழில் பெயர் பலகைகள் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தில்லையாடி வள்ளியம்மை நினைவு மண்டபம் வரும் நிதியாண்டில் சீரமைப்பதற்கு நிதி நிலைக்கு ஏற்ப விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார் உடன் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி எம் பி ராமலிங்கம் எம்எல்ஏ நிவேதா முருகன் ராஜக்குமார், பன்னீர்செல்வம், நகராட்சி தலைவர் செல்வராஜ் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்…

மேலும் சுவாரஸ்யமான செய்திகளுக்கு வி தமிழ் நியூஸ் வாட்ஸ்அப் whatsapp சேனலை கிளிக் செய்து பின்தொடரவும்