HOME

STORIES

google-news

FOLLOW

JOIN

FOLLOW

Actress Jayalakshmi arrested : பாஜக நிர்வாகி மற்றும் நடிகையுமான ஜெயலட்சுமி மோசடி வழக்கில் கைது – போலீசாரோடு கடும் வாக்குவாதம்!

நடிகையும், பாஜக நிர்வாகியுமான ஜெயலட்சுமி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். 2022 ஆம் ஆண்டு பதிவு செய்த வழக்கில் கைது செய்யப்பட்டதற்கான பின்னணி என்ன?

Actress Jayalakshmi arrested
Actress Jayalakshmi arrested

மக்கள் நீதி மைய கட்சியின் நிர்வாகியும் சினிமா பாடலாசிரியருமான சினேகன் சென்னை காவல் ஆணையரகத்தில் “சினேகன் பவுண்டேஷன்” என்னும் தனது அறக்கட்டளை பெயரில் கடந்த 2022 ம் வருடம் ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் தேதி புகார் ஒன்றை கொடுத்தார். அதில், நடிகை ஜெயலட்சுமி சமூக வலைதளம் மற்றும் இணையதளம் கணக்குகள் தொடங்கி பொதுமக்களிடம் பணம் பெற்று வருவதாகவும், இதனால் தனக்கும் தன்னுடைய அறக்கட்டளைக்கும் களங்கம் உண்டாகி வருவதாகவும் தெரிவித்திருந்தார்.

சினேகனின் புகாருக்கு அடுத்த 2 தினங்கள் கழித்து ஆகஸ்ட் மாதம் எட்டாம் தேதி பாஜக மாநில மகளிர் அணி துணைத் தலைவியும் நடிகையுமான ஜெயலட்சுமி, காவல் ஆணையர் அலுவலகத்தில் எதிர் புகார் கொடுத்தார். அதில் ‘சிநேகம் பவுண்டேஷன்’ எனக்கு தான் சொந்தம் என்றும் தான் இதன் மூலம் பல ஏழைக் குழந்தைகளுக்கு உதவி செய்து கொண்டுள்ளதாகவும், என்னுடைய பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் பாடலாசிரியர் சினேகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் தெரிவித்திருந்தார்.

இவ்வாறு, ஒருதருக்கு ஒருத்தர் மாறி மாறி காவல் ஆணையர் அலுவலகம் மற்றும் திருமங்கலம் காவல் நிலையம் என புகார் செய்த நிலையில் பின் 2 பேரும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

2022 ம் ஆண்டு அக்டோபர் மாதம் 19 ம் தேதி நீதிமன்ற உத்தரவின் படி திருமங்கலம் போலீசார் மோசடி பிரிவின் கீழ் நடிகை ஜெயலட்சுமி மீது வழக்கு பதிவு செய்தனர்.

அதே போல தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதாக பாடலாசிரியர் சினேகன் மீது நடிகை ஜெயலட்சுமி அளித்த புகாரின் பேரில் நீதிமன்ற உத்தரவுபடி 2022 அக்டோபர் மாதம் 19ஆம் தேதி திருமங்கலம் போலீசார் அவதூறு பரப்புதல் பிரிவின் கீழ் பாடலாசிரியர் சினேகன் மீது வழக்குப் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

நீதிமன்றத்தில் இந்த இரு வழக்குகளும் நடைபெற்ற நிலையில் பாஜக பிரமுகரும் நடிகையுமான ஜெயலட்சுமி புகாரில் நீதிமன்றம் எந்த முகாந்திரம் இல்லை என முடித்து வைத்தது.

Actress Jayalakshmi arrested

இந்த நிலையில் பாடலாசிரியர் சினேகன் அளித்த புகாருக்கு நடிகையும் பாஜக பிரமுகமான ஜெயலட்சுமி மீது பதியப்பட்ட வழக்கு சம்மந்தமாக திருமங்கலம் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

இதையும் படிங்க : நாட்டுகோழி முட்டை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை!

குறிப்பாக, ‘சினேகம் பவுண்டேஷன்’ பற்றிய ஆவணங்களை பெறுவதற்காகவும் வழக்கினை குறித்து விசாரணை செய்வதற்காகவும் அம்பத்தூர் எஸ்டேட் பகுதியில் இருக்கும் ஜெயலட்சுமி வீட்டில் இன்று காலை முதல் திருமங்கலம் போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பின்னர், பாஜக பிரமுகரும், நடிகையுமான ஜெயலட்சுமியை திருமங்கலம் போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் அவரிடம் சுமார் ஐந்து மணி நேரம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் பாடலாசிரியர் சினேகனின் ‘சினேகம் பவுண்டேஷன்’ பெயரில் மோசடி செய்தது தெரியவந்தது. அதனை அடுத்து நடிகை ஜெயலட்சுமியை திருமங்கலம் போலீசார் கைது செய்தனர்.

மேலும் நடிகை ஜெயலட்சுமி தொடங்கிய ‘சினேகம் பவுண்டேஷன்’ அறக்கட்டளையின் ஆவணங்கள் அனைத்தையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க : வீட்டில் வெற்றிலை வளர்ப்பதால் இவ்வளவு நன்மைகளா..!

மேலும் சுவாரஸ்யமான செய்திகளுக்கு வி தமிழ் நியூஸ் வாட்ஸ்அப் whatsapp சேனலை கிளிக் செய்து பின்தொடரவும்