HOME

STORIES

google-news

FOLLOW

JOIN

FOLLOW

செய்தி

மயிலாடுதுறையிலும் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் மீது தாக்குதல் சம்பவம்

Attack on private TV reporter

Attack on private TV reporter : வைகல் கிராமத்தில் கோயில் இடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ள பிரச்சனை தொடர்பாக தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் அங்குள்ள மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது லேசான காயத்துடன் தப்பிய செய்தியாளர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பாலையூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.

Attack on private TV reporter
Attack on private TV reporter

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா கோனேரிராஜபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட வைகல் கிராமத்தில் செல்லியம்மன் என்று அழைக்கப்படும் ஸ்ரீ பிடாரியம்மன் ஆலயம் உள்ளது இந்த கோயிலுக்கு சொந்தமான இடத்தில் கோயிலின் முன்னாள் பூசாரி கோவிந்தசாமி மற்றும் தற்போதைய பூசாரி கணேசன் ஆகிய இருவருக்கும் கோவில் இடத்தில் பட்டா பெற்று தனித்தனியாக வீடு கட்டி வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் பூசாரி கோவிந்தசாமி கோயில் இடத்தின் ஒரு பகுதியை ஆக்கிரமித்து உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஸ்ரீ பிடாரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் செய்வதற்காக திருப்பணிகள் நடைபெற்று வருகின்ற நிலையில் கோவிலுக்கு சுற்றுச்சுவர் மற்றும் யாகசாலை அமைப்பதற்கான கோயிலிடத்தில் சுவர் வைத்து முன்னாள் பூசாரி கோவிந்தசாமி ஆக்கிரமித்துள்ள வைத்துள்ளதாக கூறி கிராம மக்கள் இந்த இடத்தை அகற்றி தருமாறு கேட்டுள்ளனர் இந்த பிரச்சனை தொடர்பாக கோஷ்டி பூசல் ஏற்பட்டதால் ஊர் பொதுமக்கள் கடந்த 8ம்தேதி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்துள்ளனர்.

Read Also : 5 Foods : பெண்களுக்கு அதிகரிக்கும் இரும்பு சத்து குறைபாடுகளை தடுக்கும் 5 உணவுகள்

நேற்று வருவாய்த்துறையினர் பிடாரியம்மன் கோயில் ஆய்வு செய்து சுற்றுச்சுவரை அகற்றித் தருமாறு கோவிந்தசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது இந்நிலையில் அதே கிராமத்தில் வசிக்கும் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் விக்னேஷ் தூண்டுதலின் பெயரிலேயே கிராம மக்கள் புகார் தெரிவித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கருதிய கோவிந்தசாமி உறவினர்கள் அருண், அவினாஷ்,முருக பாண்டி ஆகிய மூன்று பேர் வீட்டிற்கு வந்த விக்னேசை வழி மறித்து கையில் வைத்திருந்த கத்தியால் கை மற்றும் வயிற்றில் கிழித்துள்ளனர் இதில் அதிர்ச்சி அடைந்த விக்னேஷ் அவர்களிடமிருந்து தப்பி பாலையூர் காவல் நிலையம் சென்று தஞ்சமடைந்துள்ளார். அங்கிருந்து போலீசார் விக்னேசை மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

லேசான காயம் என்பதால் முதலுதவி சிகிச்சை பெற்று விக்னேஷ் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் கொடூரமாக வெட்டப்பட்ட நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்திலும் செய்தியாளர் மீது தாக்குதல் நடைபெற்ற சம்பவம் அங்குள்ள மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சுவாரஸ்யமான செய்திகளுக்கு வி தமிழ் நியூஸ் வாட்ஸ்அப் whatsapp சேனலை கிளிக் செய்து பின்தொடரவும்