HOME

STORIES

google-news

FOLLOW

JOIN

FOLLOW

Chandana Mariamman Nerthikadan : கரியாப்பட்டினம் சந்தன மாரியம்மனுக்கு 38 வது ஆண்டாக பக்தர்கள் இருமுடி கட்டி நேர்த்திக் கடன் செய்து வழிபாடு:

Chandana Mariamman Nerthikadan
Chandana Mariamman Nerthikadan

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கரியாப்பட்டினத்தில் அருள்மிகு சந்தன மாரியம்மன் ஆலயம் அமைந்திருக்கிறது. இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் பக்தர்கள் மாலை அணிந்து கொண்டு 48 தினங்கள் விரதம் இருந்து தை மாதம் இரு முடி கட்டி நேர்த்தி கடன் செலுத்துவது வழக்கம்

Chandana Mariamman Nerthikadan

இந்த ஆண்டு 38 வது வருடமாக விரதம் இருந்த பக்தர்கள் பஜனை செய்து, கூட்டாக வழிபாடு செய்து வழிபாட்டு மன்றத்திலிருந்து இருமுடி கட்டி புறப்பட்டு ஊரின் முக்கிய வீதிகள் வழியே ஊர்வலமாக வந்தனர் மாலை அணிந்த வந்த பக்தர்களுக்கு வழி நெடுகிலும் பொதுமக்கள் பால், மஞ்சள் பொடி, சந்தனம் இவைகளால் பாத பூஜை செய்து வழிபட்டனர்.

தொடர்ந்து இருமுடி சுமந்து ஆலயத்தை வந்தடைந்த பக்தர்கள் தாங்கள் சுமந்து வந்த பாலை கொண்டு அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர் இந்த நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Read Also : நீர்வளத்துறை அதிகாரி பணிநிறைவு விவசாயிகளுக்கு அறுசுவை விருந்து

மேலும் சுவாரஸ்யமான செய்திகளுக்கு வி தமிழ் நியூஸ் வாட்ஸ்அப் whatsapp சேனலை கிளிக் செய்து பின்தொடரவும்