HOME

STORIES

google-news

FOLLOW

JOIN

FOLLOW

செய்தி

அரசு மாநாகரட்சியை உருவாக்கியதே தவிர அதற்க்கான நிதியை ஒதுக்கவில்லை – சிட்லபாக்கம் ச.ராஜேந்திரன்

Chitlapakkam Rajendran allegation

Chitlapakkam Rajendran allegation : அரசு மாநாகரட்சியை உருவாக்கியதே தவிர அதற்க்கான நிதியை ஒதுக்கவில்லை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் ச.ராஜேந்திரன் குற்றச்சாட்டு

Chitlapakkam Rajendran allegation
Chitlapakkam Rajendran allegation

அதிமுக சார்பில் திமுக அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து செங்கல்பட்டு மாவட்டம் சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் மூவேந்தர் நகர் பகுதியில் அதிமுகவின் பம்மல் வடக்குப்பகுதி எம்ஜிஆர் மன்றத்துணை தலைவர் எம்‌. மூர்த்தி தலைமையில் தெரு முனை பிரச்சாரக் கூட்டம் நடைப்பெற்றது‌.

இதில் சிறப்பு அழைப்பாளராக செங்கல்பட்டு வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிட்லபாக்கம் ச.ராஜேந்திரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மேலும் இதில் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக துணை செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ப.தன்சிங் , தலைமை கழக பேச்சாளர் புலவர் ராசகோபால், முன்னாள் ஒன்றிய கழக செயலாளர் என்.சி.கிருஷ்ணன், ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இதையும் படிங்க : மதிய உணவிற்கு பின் இனிப்பு சாப்பிடுவது நல்லதா? என்ன இனிப்பு சாப்பிடுவது ?

Chitlapakkam Rajendran allegation

இதில் மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ச.ராஜேந்திரன் பேசுகையில் திமுக அரசு மாநகராட்சியை உருவாக்கியதே தவிர அதற்கு தேவையான நிதியை உருவாக்கவில்லை என அவர் குற்றம் சாற்றினார்‌. பின்பு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது ‌இதில் பம்மல் வடக்குப்பகுதி செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான ஜெகநாதன் முன்னிலை வகித்தார்.

மேலும் இதில் மாநில,மாவட்ட, ஒன்றிய, பகுதி , வட்ட ,கிளை கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியின் இறுதியாக மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் வழக்கறிஞர் பார்த்திபன் நன்றியுரையாற்றினார்.

இதையும் படிங்க : அபிராமி அம்மன் சமேத அமிர்தகடேஸ்வரர் கோயிலில் தை அமாவாசையை முன்னிட்டு பால்குட விழா

மேலும் சுவாரஸ்யமான செய்திகளுக்கு வி தமிழ் நியூஸ் வாட்ஸ்அப் whatsapp சேனலை கிளிக் செய்து பின்தொடரவும்