HOME

STORIES

google-news

FOLLOW

JOIN

FOLLOW

செய்தி

நாகப்பட்டினம் மாவட்டம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆட்சியர் திடீர் ஆய்வு

collector visit

Collectors at primary health center : நாகை மாவட்டத்தின் கடைக்கோடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீரென்று ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்: ஊட்டச்சத்து குறைபாடு கர்ப்பிணி தாய்மார்கள் பற்றி கேட்டறிந்தார்:

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரணியம் வட்டத்தில் கடைக்கோடியில் உள்ள கோடியக்கரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் திடீரென்று ஆய்வு மேற்கொண்டார்.

Collectors at primary health center
Collectors at primary health center

இந்த ஆய்வில் கோடியக்கரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள கர்ப்பிணி தாய்மார்கள் பற்றியும் அவர்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சிகிச்சைகள் பற்றியும் வட்டார மருத்துவர் சுந்தர்ராஜனிடம் கேட்டறிந்தார். மேலும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகள் மற்றும் மருந்துகளின் இருப்பு குறிப்பேடுகள் பற்றியும் ஆய்வு செய்தார் தொடர்ந்து சிகிச்சைக்கு வந்திருந்த நோயாளிகளிடம் மாவட்டத்தின் கடை கோடியிலும் உள்ள பொதுமக்களுக்கு சிகிச்சை முறையாக அளிக்கப்படுகிறதா ஏதேனும் குறைபாடுகள் இருக்கிறதா என கேட்டறிந்தார்.

Read Also : உங்களுக்கு கீரிப்பிள்ளை பற்றி தெரியுமா.?

ஆய்வின் போது அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் யுவன் சிங்,செவிலியர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் அருகில் இருந்தனர்

மேலும் சுவாரஸ்யமான செய்திகளுக்கு வி தமிழ் நியூஸ் வாட்ஸ்அப் whatsapp சேனலை கிளிக் செய்து பின்தொடரவும்